OUR CLIENTS
பிரித்தாளும் சூழ்ச்சியை கொண்டு ஆட்சி செய்யும் காங்கிரஸ்
பிரித்தாளும் சூழ்ச்சியை கொண்டு ஆட்சி செய்யும் காங்கிரஸ் Posted on 09-May-2018 பிரித்தாளும் சூழ்ச்சியை கொண்டு ஆட்சி செய்யும் காங்கிரஸ்

பெங்களூரூ, மே 9-

ஜாதி, மதம் மூலம் மக்களை குழப்பி, பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்தியே காங்கிரஸ் ஆட்சி செய்து வருவதாக கர்நாடகா மாநிலம் பிஜாபூர் நகர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி சாடியுள்ளார்.

கர்நாடகாவில் வருகிற 12-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மிக தீவிரமாக நடைபெற்று வரும் தேர்தல் பிரசாரத்தில் மோடியும், சோனியா காந்தியும்  ஒரே பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இந்நிலையில், பிஜாபூர் மாவட்டத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள மோடி பேசியதாவது:-  ஜாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் மக்களை பிரித்து வைப்பதன் மூலமே காங்கிரஸ் ஆட்சி செய்கிறது.  ஆட்சியில் அமர்ந்ததும், ஏ.சி அறையில் அமர்ந்து கொண்டு, பாஜகவை எவ்வாறு வீழ்த்துவது என்ற திட்டத்தை மட்டுமே தீட்டி, மக்களை கவனிக்காமல் விட்டதால் தான் நாடு முழுவதும் காங்கிரஸ் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 

ஜாதி மதம் மூலம் ஒன்றுபட்ட சமூகத்தை பிளவுபடுத்துவதன் மூலமே காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது.  ஊழல் செய்யாத ஒரு அமைச்சர் கூட காங்கிரசில் இல்லை இருந்தால் சொல்லுங்கள்.  ராகுல் காந்தி மீது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் நம்பிக்கை இழந்துவிட்டதால்தான் சோனியா நேற் பிரசாரம் மேற்கொண்டு உள்ளார்.  இவ்வாறு அவர் பேசினார்.

Label