OUR CLIENTS
ஜாக்டோ-ஜியோ போராட்ட விவகாரம் அரசு ஊழியர், ஆசிரியர்கள் கைது
ஜாக்டோ-ஜியோ போராட்ட விவகாரம் அரசு ஊழியர், ஆசிரியர்கள் கைது Posted on 09-May-2018 ஜாக்டோ-ஜியோ போராட்ட விவகாரம்  அரசு ஊழியர், ஆசிரியர்கள் கைது

சென்னை, மே 9-

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தை தமிழக அரசும், காவல்துறையும் கையாண்ட விதம் மிகவும் தவறானது என்று தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பல மாவட்டங்களில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கைது செய்து போராட்டத்தை நசுக்க அரசு எடுத்த முயற்சி கண்டனத்திற்குரியது. அதையும் தாண்டி, நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டிய பிரச்சினைகளுக்கு காவல் துறையை பயன்படுத்தி கைது, வழக்கு என்று தமிழக அரசு பிரச்சினைகளை மேலும் தீவிரப்படுத்துவது கண்டனத்திற்குரியது. நேற்றும் கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை எந்த நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அரசை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
அதேபோல, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதத்தில் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி சுமூக தீர்விற்கு தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்:- அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தை தமிழக அரசும், காவல்துறையும் கையாண்ட விதம் மிகவும் தவறானது. அரசு ஊழியர்கள் போராட்டத்தை அறிவித்தவுடன் அவர்களை தமிழக அரசு அழைத்து பேசியிருக்க வேண்டும். மாறாக தமிழக அரசின் வருமானம் முழுவதும் அரசாங்க ஊழியர்களுக்கே செலவழிக்கப்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த ஆட்சியாளர்கள் முயன்றனர்.

சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு 100 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கும் போது ஆட்சியாளர்களின் கண்ணுக்கு தெரியாத நிதிப் பற்றாக்குறை இப்போது தான் தெரிகிறது போலும். தங்களுக்கு ஒரு நீதி... அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு நீதி என்பது போல அரசு செயல்படுவதை ஏற்க முடியாது.
அதுமட்டுமின்றி, போராட்டத்திற்கு முன்பாகவே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை காவல்துறை கைது செய்து சிறைகளில் அடைத்தது. அரசின் ஒடுக்கு முறையால் அரசு ஊழியர்கள் எழுச்சியுடன் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த அரசு, அவர்களை உடனடியாக விடுதலை செய்திருக்க வேண்டும். ஒருவேளை அவர்கள் மீண்டும், மீண்டும் போராட்டம் நடத்துவார்கள் என்று காவல்துறை நினைத்திருந்தால் சென்னை புற நகருக்கு கொண்டு சென்று விடுதலை செய்திருக்கலாம்.
அரசு ஊழியர்களின் போராட்டம் இனியும் தொடரக்கூடாது. போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரின் கோரிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன்:- போராட்ட சங்கங்களின் தலைவர்களையும், ஜாக்டோஜியோ அமைப்பினைச் சார்ந்த பல்லாயிரக் கணக்கானவர்களை நேற்று முன்தினமே முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பேரில் பேருந்து நிலையங்களிலும், சுங்கச்சாவடிகளிலும் கைது செய்தது அநாகரீகமானச் செயல்.

அனைத்து பத்திரிகை &களிலும் அமைச்சர் ஜெயக் குமாரின் வேண்டுகோள் செய்தியினையும் வெளியிட்டு, இப்போராட்டத்தை நீர்த்துபோகச் செய்ய முயன்றுள்ளது பழனிசாமியின் அரசு. ஆனால், உண்மையிலேயே இப்போராட்ட அறிவிப்பு தொடர்பாக அரசு ஊழியர்களையும், அரசு பள்ளி ஆசிரியர்களின் அமைப்பைச் சார்ந்தவர்களையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியிருக்க வேண்டும். 
நியாயமான அவர்களின் போராட்டத்தை அடக்குமுறையை ஏவி, அரசு முடக்க வேண்டும் என்று நினைப்பது முட்டாள் தனம். கைது நடவடிக்கைகளை கைவிட்டு, உடனடியாக பழனிசாமியின் அரசு இவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைக்க வேண்டும். தவறான அணுகு முறையை இப் பிரச்சனையில் கையாண்டுவரும் பழனிசாமியின் அரசுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

Label