OUR CLIENTS
சமூக வலைதளங்களில் அரசியல் கட்சிகளை விமர்சிக்க வேண்டாம்
சமூக வலைதளங்களில் அரசியல் கட்சிகளை விமர்சிக்க வேண்டாம் Posted on 09-May-2018 சமூக வலைதளங்களில் அரசியல் கட்சிகளை விமர்சிக்க வேண்டாம்

சென்னை, மே 9-

சமூக வலைதளங்களில் மற்ற அரசியல் கட்சிகளை விமர்சிப்பது போன்ற செயல்களில் ரசிகர்கள் யாரும் ஈடுபடக் கூடாது என்று ரஜினிகாந்த் அறிவுறுத்தி உள்ளார். 

அரசியலில் இறங்கி இருக்கும் ரஜினி கட்சி தொடங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார். அதற்காக மாவட்டம்தோறும் செயல்பட்டு வரும் ரசிகர் மன்றங்களை அரசியல் அமைப்பாக மாற்றவும் எல்லா நிலைகளிலும் மக்கள் மத்தியில் கட்சிக்கு நல்ல இமேஜை ஏற்படுத்தும் வகையில் பணிகளை செய்யும்படியும் மன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி ஆலோசனை வழங்கி இருக்கிறார்.
மக்கள் மத்தியில் சமூக வலைத்தளங்கள் மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளன. இதில் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் மட்டுமில்லாமல் தனிநபர் விமர்சனங்களும் அனல் பறக்கின்றன. ரஜினியின் காலா பட இசை வெளியீட்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.  இதற்காக 8,500 பேருக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.

காவிரி போராட்டம் விசுவரூபம் எடுத்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கோலாகலமாக கொண்டாடப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று ரஜினி கருத்து தெரிவித்து இருந்தார்.
வலைத்தளங்களில் அவரது கருத்தை மேற்கோள் காட்டி ‘இப்போது காலா படத்துக்காக இவ்வளவு கோலாகல விழா தேவையா? என்று விமர்சித்துள்ளார்கள். இதற்கிடையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள 6 பேர் கொண்ட குழுவினரை ரஜினி அழைத்து பேசினார்.
அப்போது, சமூக ஊடகங்களில் கருத்து வெளியிடுவது, விமர்சனங்களுக்கு எதிராக அறிக்கை விடுவது ஆகியவற்றை தவிர்க்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். குறிப்பாக தனிநபர் தாக்குதல், மற்ற கட்சிகளை விமர்சிப்பது போன்ற செயல்களில் ரசிகர்கள் யாரும் ஈடுபடக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது ஆதாரத்தோடு புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். அதற்கு பதிலாக மன்றங்களின் செயல்பாடு, மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபடும்படி ஆலோசனைகள் வழங்கி இருக்கிறார்.

Label