OUR CLIENTS
பாடத்திட்டத்தை மாற்றகோரிய வழக்கில்- தமிழக அரசுக்கு நோட்டீஸ்
பாடத்திட்டத்தை மாற்றகோரிய வழக்கில்- தமிழக அரசுக்கு நோட்டீஸ் Posted on 09-May-2018 பாடத்திட்டத்தை மாற்றகோரிய வழக்கில்- தமிழக அரசுக்கு நோட்டீஸ்

சென்னை, மே 9-

‘நீட்’ தேர்வை எதிர்கொள்ளும் வகையில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு இணையாக பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கிற்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், மார்ட்டின் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி யிருப்பதாவது:- தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள் பலர் பிளஸ்-2 பொதுத்தேர்வில், நல்ல மதிப்பெண்கள் எடுக்கின்றனர். பல மாணவர்கள் 1,200-க்கு, 1,190-க்கு மேல் மதிப்பெண்கள் எடுக்கின்றனர். ஆனால், இந்த மாணவர்கள், மருத்துவ படிப்புக்காக நடத்தப்படும் ‘நீட்’ தேர்வில் தோல்வியடைகின்றனர். குறைந்த மதிப்பெண்களை எடுக்கின்றனர்.  ‘நீட்’ தேர்வுக்கான கேள்விகள், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படுகின்றன. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு இணையாக, மாநில பாடத்திட்டம் இல்லை.

இதனால், கேரளா, ஆந்திரா, கர்நாடகம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு இணையாக பாடத்திட்டங்களை உருவாக்கியுள்ளனர். மாநில பாடத்திட்டத்தின் தரத்தை அவர்கள் உயர்த்தியுள்ளதால், அந்த மாநிலங்களில் ஓரளவு படிக்கும் மாணவர்கள் கூட ‘நீட்’ உள்ளிட்ட தேசிய அளவில் நடைபெறும் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை எளிதாக எடுத்து விடுகின்றனர்.
இதனால், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு இணையாக, மாநில பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும்படி, தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு கடந்த ஆண்டு ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் கோரிக்கை மனு அனுப்பினேன்.
ஆனால், என் கோரிக்கை மனுவை அதிகாரிகள் பரிசீலிக்கவில்லை. அதற்கு மாறாக, “மாநில பாடத்திட்டத்தை உருவாக்குவது என்பது அரசின் கொள்கை முடிவாகும். இந்த விவகாரத்தில் யாருடைய அறிவுரையும் தங்களுக்கு தேவையில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். எனவே, நீட் போன்ற தேசிய அளவில் நடத்தப்படும் பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்கும் விதமாக தமிழக பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வி.பாரதிதாசன், என்.சேஷசாயி ஆகியோர், தமிழக பள்ளிக்கல்வித்துறை பதில் மனு தாக்கல் செய்யும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். 

Label