OUR CLIENTS
ஸ்மார்ட் மீட்டர் திட்ட அறிக்கை தயார்!
ஸ்மார்ட் மீட்டர் திட்ட அறிக்கை தயார்! Posted on 09-May-2018 ஸ்மார்ட் மீட்டர் திட்ட அறிக்கை தயார்!

வேலூர், மே 9-

தமிழகத்தில், ‘ஸ்மார்ட் மீட்டர்’ திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, மத்திய அரசின், ‘எனர்ஜி எபிஷியன்சி’ நிறுவனம் அறிக்கை சமர்ப்பித்து, இரண்டு மாதங்களுக்கு மேலாகியும், மின் வாரியம், எந்த முடிவும் எடுக்கவில்லை.

வீடு உள்ளிட்ட இணைப்புகளில், மின் பயன்பாடு கணக்கு எடுக்க செல்லும் சில ஊழியர்கள், குறைவாக கணக்கு எடுப்பது, கம்ப்யூட்டரில் தாமதமாக பதிவு செய்வது போன்ற முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்.
மத்திய அரசு, மாநில மின் வாரியங்களின் நிதி நெருக்கடியை சரிசெய்ய, ‘உதய்’ என்ற, மின் திட்டத்தை துவக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், மின் பயன்பாட்டை துல்லியமாக கணக்கிட, ‘ஸ்மார்ட் மீட்டர்’ பொருத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அந்த மீட்டர், தொலைத்தொடர்பு வசதி வாயிலாக, மின்வாரிய, ‘சர்வருடன்’ இணைக்கப்படும். மின் பயன்பாடு கணக்கு எடுக்க வேண்டிய நாள் வந்ததும், மீட்டர் தானாகவே செயல்பட்டு, கட்டண விபரத்தை, நுகர்வோருக்கு, எஸ்.எம்.எஸ்., செய்தியாக தெரிவிக்கும்.
மத்திய அரசின், ‘எனர்ஜி எபிஷியன்சி’ நிறுவனம், தமிழகத்தில், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, மின் வாரியத்திடம், உத்தேச திட்ட அறிக்கையை, பிப்ரவரியில் வழங்கியது. இரண்டு மாதங்களுக்கு மேலாகியும், மின் வாரியம், அதை செயல்படுத்துவது தொடர்பாக, அந்நிறுவனத்திடம், எந்த பதிலும் அளிக்காமல் உள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: எனர்ஜி எபிஷியன்சி நிறுவனம், தன் சொந்த செலவில், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி, அதன் பணிகளை ஒருங்கிணைப்பு செய்து தருவதாகவும், அதற்கான செலவு பணத்தை, மாதம்தோறும், தவணையாக செலுத்தும்படியும் கூறியது. இதன்மீது, மின் வாரியம், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.
அரசு நிறுவனத்திடம், மீட்டர் வாங்கினால், ‘கமிஷன்’ கிடைக்காது என்ற காரணத்தால் தான், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்திற்கு, சிலர் முட்டுக்கட்டை போடுவதாக, சந்தேகிக்க தோன்றுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Label