OUR CLIENTS
‘ஆந்த்ராக்ஸ்’ தாக்கி 78 ஆடுகள் பலி!
‘ஆந்த்ராக்ஸ்’ தாக்கி 78 ஆடுகள் பலி! Posted on 09-May-2018 ‘ஆந்த்ராக்ஸ்’ தாக்கி 78 ஆடுகள் பலி!

மதுரை, மே 9-

மதுரை அருகே, ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி, 78 ஆடுகள் பலியாகின.

மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகாவில், ஒரு லட்சம் செம்மறி ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. வெள்ளாடுகளும் வளர்க்கப்படுகின்றன. ஒவ்வொரு கிராமத்திலும், தினமும் காலை, 6:00 மணிக்கு ஆடுகளை பல கி.மீ., அழைத்துச் சென்று, மேய்ச்சலுக்கு விட்டு, மாலை வீடு திரும்புவர்.காரைகேணி கிராமத்தில், ஆந்த்ராக்ஸ் நோய்க்கு ஆடுகள் பலியாகி வருகின்றன. நேற்று முன்தினம், 11, நேற்று, 12 ஆடுகள் பலியாகின. 

பேரையூர் தாலுகாவில், நேற்று முன்தினம் வரை, 78 ஆடுகள் பலியாகி உள்ளன.கால்நடை டாக்டர்கள், இறந்த ஆடுகளின் ரத்த மாதிரியை சேகரித்து, சென்னை கால்நடை நோய் தடுப்பு பிரிவுக்கு அனுப்பினர். அங்கு ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில், ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி, ஆடுகள் இறந்தது தெரிந்தது.

Label