OUR CLIENTS
இந்தியாவில் முதல் முறையாக ஆசிய ஊடக மாநாடு டெல்லியில் இன்று தொடக்கம்
இந்தியாவில் முதல் முறையாக ஆசிய ஊடக மாநாடு டெல்லியில் இன்று தொடக்கம் Posted on 10-May-2018 இந்தியாவில் முதல் முறையாக ஆசிய ஊடக மாநாடு  டெல்லியில் இன்று தொடக்கம்

புதுடெல்லி, மே 10-

ஆசிய ஊடக மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிறது.

இந்தியா நடத்தும் இந்த மாநாட்டில் இந்தியா உள்பட 40 நாடுகளைச் சேர்ந்த  பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். 3 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், தற்போது ஊடகத் துறையில் உள்ள பிரச்னைகள், சவால்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட இருக்கின்றன.  இன்று நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில் மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை  அமைச்சர் ஸ்மிருதி  இரானி பங்கேற்று மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். 
“எங்கள் கதைகளைச் சொல்கிறோம்& ஆசியாவிலும், அதற்கு மேலும்” என்ற மையக் கருத்துடன் இந்த உச்சி மாநாடு நடைபெறுகிறது.  

ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் கொள்கைகள், நெறிமுறைகள், விதிமுறைகள், சட்டங்கள் உள்ளிட்டவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும். 39 வெளிநாடுகளில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். இந்தியாவில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த மாநாடு இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். 
மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சகம், இந்திய மக்கள் தகவல் தொடர்பியல் கல்வி நிறுவனம், ஆசிய பசிபிக் தகவல் ஒளிபரப்பு மேம்பாட்டு கல்வி நிலையம் ஆகியவை இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன. இதன் மூலம் ஆசிய நாடுகளிடையே ஊடகத் துறை மற்றும் தகவல் தொடர்பு ஒத்துழைப்பு மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கதேசம், கம்போடியா தகவல் தொடர்புத் துறை அமைச்சர்கள், தென் கொரியா, ஈரான் நாடுகளின் தகவல் தொடர்புத் துறை அமைச்சக உயரதிகாரிகள் உள்ளிட்டோரும், ஐ.நா., யுனெஸ்கோ உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். மாநாட்டின் நிறைவு அமர்வில் 2018-ம் ஆண்டிற்கான உலகத் தொலைக்காட்சி விருதுகளை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை இணை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ராத்தோர் வழங்கவுள்ளார்.

Label