OUR CLIENTS
கர்நாடாகாவில் யார் பெறுவார் இந்த அரியாசனம்!
கர்நாடாகாவில் யார் பெறுவார் இந்த அரியாசனம்! Posted on 10-May-2018 கர்நாடாகாவில் யார் பெறுவார் இந்த அரியாசனம்!

பெங்களூரு, மே 10-

கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் யார் ஆட்சியை கைப்பற்றப் போகிறார்கள். யார் அரியணை ஏற உள்ளனர் என்ற பரபரப்பு அரசியல் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ளது.

இந்திய அரசியலில் பல குழப்பங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. எங்கு இடைத்தேர்தல் நடந்தாலும் மத்திய அரசுக்கு சற்று தோல்வியை தருகிறது. ஆகவே காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி அனைத்து கட்சிகளையும் அழைத்து ஒரு விருந்து அளித்து பாஜவுக்கு எதிராக ஒரு கூட்டணியை அமைக்க முடிவு செய்தபோது முக்கிய கட்சிகள் இதில் கலந்து கொண்டாலும் இந்திய அரசியலில் மாநில கட்சிகளின் கைதான் ஓங்கியிருக்கிறது.
குறிப்பாகச் சொல்லப்போனால் இந்திய அரசியலில் 3வது இடத்தில் தமிழ்நாட்டை சார்ந்த அதிமுகவும், 4&வது இடத்தில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரசும் அதிக செல்வாக்குடன் இருக்கிறது. 3&வது அணியாக வலுவாகும் என்று பல மாநில கட்சி தலைவர்கள் பேசி வருகிறார்கள். இன்று ஆளுங்கட்சியாக இருக்கும் பாஜவை அதாவது மத்திய மோடி அரசை மாற்ற வேண்டுமானால் அனைத்து எதிர்கட்சிகளும் ஒரே அணியில் இன்று போராடி வெற்றியை பெற வேண்டும். அதேநேரம் அடுத்த பிரதமர் என்ற கேள்விக்கு எதிர்கட்சிகள் யாரை அடையாளம் காட்டுவார்கள். அந்த அடையாளம் காட்டும் நபர் எந்த கட்சியைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்ல ஆளில்லை. இருந்தாலும் பாஜவுக்கு எதிராக காங்கிரஸ் மட்டுமே இருக்கிறது என்று சொல்ல முடியாது.

கடந்த காலத்தை சற்று திரும்பி பார்த்தால் டெல்லியில் நடந்த சட்டசபை தேர்தலில் மத்தியில் ஆளுங்கட்சியான பாஜவும், எதிர்கட்சியான காங்கிரசையும் பின்னால் தள்ளிவிட்டு ஆம்ஆத்மி கட்சி பெரிய வெற்றியை குவித்தது. இந்த நிலைதான் தமிழ்நாடு, மேற்குவங்கம், ஆந்திரம்,கேரளம், சீமாந்திரா போன்ற மாநிலங்களில் பாஜ இல்லாத மாநில கட்சிகள் ஆட்சி செய்து கொண்டிருக்கின்றன.   இந்நிலையில்தான் கர்நாடக  மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வரும் 12.5.2016 அன்று நடைபெற உள்ளது.

இங்கு காங்கிரஸ் கட்சியும் மதசார்பற்ற ஜனதாதளமும் பிரிந்து தனித்தனியாக நிற்பது காங்கிரசுக்கு தோல்வி தரும் என்று சொன்னாலும் ஒட்டுமொத்த இந்தியாவில் ஆட்சி செய்யும் பாஜவை தோற்கடிக்க வேண்டும் என்று பல மாநில கட்சியின் தலைவர்கள் நினைக்கிறார்கள்.  கர்நாடகாவிற்கு வரும் பல மாநில கட்சி தலைவர்கள் தேர்தல் களத்தில் காங்கிரசை ஆதரிப்பதா இல்லை மதச்சார்பற்ற ஜனதாதளத்தை ஆதரிப்பதா இல்லை மதச்சார்பற்ற    ஜனதாதளத்தை ஆதரிப்பதா என்ற கேள்விக்கு  விடை காண முடியாது சற்று      
தடுமாறுகிறார்கள். 

அதேநேரம் உத்திரபிரதேசத்தில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சியைச் சார்ந்தவர்கள் காங்கிரசை விட மதச்சார்பற்ற ஜனதா தளத்தை ஆதரிப்பதே நல்லது என்று முடிவெடுத்திருக்கிறார்கள். கர்நாடக அரசியலில் வெற்றி தோல்வியை இந்தியாவே எதிர்நோக்கி இருக்கிறது. இந்த தேர்தலில் பாஜ வெற்றி கண்டால் மோடி அரசு நல்ல அரசு என்று சொல்வார்கள். 
தோல்வி கண்டால் வர இருக்கும் 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலிலும் பாஜவுக்கு தோல்வியை தரும். இது மக்களவை தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதை இந்த கர்நாடகாவில் பாஜ வெற்றிகாணும் என்று மத்திய அரசு ஒரு கணக்கை போட்டு அதற்கு செயல்வடிவம் தந்து கர்நாடக தேர்தலை கண்காணித்து வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியும் கர்நாடக முதல்வர் சித்தராமையா அவசரமாக முடிவுகளை எடுக்கிறார். மதச்சார்பற்ற ஜனதாதளம் என்பது இந்தியாவில் இண்டிகேட் சிண்டிகேட்  என்ற பிரிவினை வந்தபோது தென்மாநிலங்களில் கர்நாடகாவில் மட்டும்தான் சிண்டிகேட் வெற்றி கண்டது. 

அன்று முதல் காங்கிரஸ் தொடராட்சி தராவிட்டாலும் இந்திரா காந்தி இந்த மாநிலத்தில் நின்று வெற்றி கண்டுதான் மீண்டும் இந்திய பிரதமரானார் என்பதை காங்கிரஸ் தலைவர்கள்  மறந்துவிடக்கூடாது. 
அதேநேரம் மதசார்பற்ற   ஜனதா தளத்தில் முன்னாள் பிரதமர் தேவகௌடாவும், அவர் மகன் குமாராசாமியும் எந்த பிரிவினையும் இல்லாது ஒற்றுமையுடன் செயல்பட்டதால்தான் சித்தராமமையவை வெற்றி பெறச் செய்து உள்ளாட்சி மன்றத்தையும் கைப்பற்றினார்கள். இந்தியாவில் காங்கிரசுக்கு பல மாநிலங்களில் தொடர் சரிவுகள் வந்து கொண்டிருக்கும்.

இந்த நேரத்தில் தனித்து நிற்பது காங்கிரஸ் கட்சிக்கு அழகல்ல. யார் பெரியவர் என்ற  கேள்விக்கு விடை தேடுவதைவிட பாஜவை தோற்கடிக்க வேண்டுமென்று காங்கிரஸ்  தலைவர்கள் நினைக்கும் இந்த காலகட்டத்தில் எளிதாக வெற்றி பெற மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து வெற்றியை கண்டிருக்கலாம். 
அந்த வெற்றியை பெற சித்தராமையா  வெறுப்பது ஏன் என்று  தெரியவில்லை. இந்திய அரசியலில்  2019ல் பொதுத்தேர்தல் வர இருக்கிறது. 
இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும் மக்களவை தேர்தலுடன் மாநில சட்டசபை தேர்தலும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டுமென்று ஒரு திட்டமும் இருப்பதால் இந்த தேர்தலில் யார் வெற்றி கண்டாலும் 2019ல் நடக்கும் மக்களவை தேர்தலுடன் மாநில தேர்தலும் நடத்தினால் இங்கு தோல்வி அத்தனை கட்சிகளுக்கும்தானே.  கர்நாடகாவில் குமாரசாமி முதல்வராக வேண்டுமென்று நல்ல திட்டங்களை மக்களிடம் நேரடியாக தந்த வண்ணம் இருக்கிறார். 

இந்த தேர்தலின் முடிவை இந்தியாவே எதிர்நோக்கி காத்திருக்கிறது. இந்த தேர்தலின் முடிவுதான் மோடி அரசுக்கு வெற்றியா? தோல்வியா? என்பதை தெரிவிக்க இருக்கிறது.
அதேநேரம் கர்நாடகாவில் முதல்வராக வரப்போவது யார் என்ற « கள்விக்கு ஒன்று சித்தராமையாவா, 2.எடியூரப்பாவா, 3.குமாரசாமியா என்ற கேள்விக்கு விரைவில் விடை தெரிய  உள்ளது. யார் பெறுவார் இந்த அரியாசனம், அரியணை ஏறப்போவது யார் என்பதற்கும்   மக்கள் வரும் 12ல் விடையளிக்க உள்ளனர். 
இருந்தாலும் இன்றைய நிலவரப்படி மக்கள் சித்தராமமையாவுக்கு வாக்களிக்க ஆயத்தமாகியுள்ளது மட்டும் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சித்தராமமையா மீண்டும் முடிசூடப்போகிறாரா என்பதை  
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label