OUR CLIENTS
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்: சந்தானம் குழு அறிக்கையை வெளியிட உயர்நீதிமன்றம் தடை
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்: சந்தானம் குழு அறிக்கையை வெளியிட உயர்நீதிமன்றம் தடை Posted on 10-May-2018 பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்: சந்தானம் குழு அறிக்கையை வெளியிட உயர்நீதிமன்றம் தடை

சென்னை

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சந்தானம் குழு அறிக்கையை வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

விசாரணை முடிந்து ஆளுநரிடம் அறிக்கையை சந்தானம் குழு சமர்ப்பிக்க மட்டுமே வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சந்தானம் குழு அறிக்கையை வெளியிடவோ, ஊடகங்களுக்கு வழங்கவோ கூடாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சந்தானம் குழுவினர் கடந்த வாரம் முதல் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் அறிக்கையை வெளியிட உயர்நீதிமன்றம் தற்போது தடை விதித்துள்ளது.

Label