OUR CLIENTS
குழந்தை கடத்தல் தொடர்பாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்புவோர்கள் மீது குண்டர் சட்டம் : வேலூர் எஸ்.பி.
குழந்தை கடத்தல் தொடர்பாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்புவோர்கள் மீது குண்டர் சட்டம் : வேலூர் எஸ்.பி. Posted on 10-May-2018 குழந்தை கடத்தல் தொடர்பாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்புவோர்கள் மீது குண்டர் சட்டம் : வேலூர் எஸ்.பி.

வேலூர்

குழந்தை கடத்தல் தொடர்பாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்புவோர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பகலவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அடையாளம் தெரியாத நபர்கள் அல்லது சந்தேகத்திற்கிடமானவர்கள் என நினைத்தால் காவல்துறையினரிடம் தான் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார். வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்புவோரை சமூக விரோதிகளாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். குழந்தை கடத்துவதாக வாட்ஸ் அப்பில் வந்த தவறான தகவலால் 2 பேர் அடித்து கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.   

காஞ்சிபுரம் எஸ்.பி. எச்சரிக்கை

இதேபோல் வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்புவோர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காஞ்சிபுரம் எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டால் காவல்துறையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Label