OUR CLIENTS
தமிழகத்தில் பெண் குழந்தைகள் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள் கடந்த 5 ஆண்டுகளில் 300% அதிகரிப்பு
தமிழகத்தில் பெண் குழந்தைகள் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள் கடந்த 5 ஆண்டுகளில் 300% அதிகரிப்பு Posted on 10-May-2018 தமிழகத்தில் பெண் குழந்தைகள் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள் கடந்த 5 ஆண்டுகளில் 300% அதிகரிப்பு

சென்னை

தமிழகத்தில் பெண் குழந்தைகள் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள் கடந்த 5 ஆண்டுகளில் 300% அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் பதிவான தரவுகளின் அடிப்படையில் தமிழகத்தில்  2011ம் ஆண்டு பெண் குழந்தைகள் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டதாக 271 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 5 ஆண்டுகளில் அதாவது 2016ம் ஆண்டு பெண் குழந்தைகள் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டதாக 1,169 வழக்குகளாக அதிகரித்துள்ளது.

5 ஆண்டுகளில் இது 331% உயர்வு கண்டுள்ளது. அதேபோல பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 2011ம் ஆண்டு 925ஆக இருந்து 2016ம் ஆண்டு 2,856 ஆக அதிகரித்துள்ளது. 2016ம் ஆண்டில் பதிவாகியுள்ள 2,856 வழக்குகளிலும் 41% பாலியல் வன்கொடுமை வழக்குகள் 15% பாலியல் தொந்தரவு வழக்குகள். இவ்வாறு பதிவாகும் குற்றங்களின் பெரும்பாலானவை உறவினர்கள், அக்கம்பக்கத்தினர், நண்பர்களால் மட்டுமே நிகழ்த்தப்பட்டுள்ளன. 

Label