OUR CLIENTS
தூத்துக்குடியில் உள்ள மலேசிய மணலை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி
தூத்துக்குடியில் உள்ள மலேசிய மணலை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி Posted on 10-May-2018 தூத்துக்குடியில் உள்ள மலேசிய மணலை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

தூத்துக்குடி

தூத்துக்குடியில் உள்ள மலேசிய மணலை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

இறக்குமதி செய்து வைக்கப்பட்ட 55 ஆயிரம் டன் மணலை கட்டுமானத்திற்கு உகந்ததா என ஆய்வு செய்து வரும் 16ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள மணலை தமிழக அரசே வாங்கி கொள்ளுமா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பிஇருந்தது. தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு நீதிமன்றத்தில் தெரிவிக்க வழக்கறிஞர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

தமிழகத்தில் மணல் தட்டுப்பாடாக உள்ளது. எனவே ரம்யா என்ற நிறுவனம் மலேசியாவில் இருந்து பல்ஆயிரம் டன் ஆற்று மணலை இறக்குமதி செய்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வந்துள்ளது.இந்நிலையில் மணலை தமிழகத்தில் உபயோகிக்க தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனை எதிர்த்து ரம்யா நிறுவனம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை தான் கடந்த நவம்பர் மாதம் 21ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்திற்குள் படிப்படியாக மூட உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.மலேசியாவில் இருந்து தூத்துக்குடியில் இறக்குமதி செய்யப்பட்ட மணலை தமிழக அரசு வாங்குமா? வாங்காதா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. எவ்வளவு விலைக்கு 55,000டன் மணலை தமிழக அரசு வாங்கும் என பகல் 12.45மணிக்கு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. 

இதற்கு பதிலளித்த தமிழக அரசு, மலேசியாவில் இருந்து இறக்குமதியான மணலில் 85% சிலிக்கான் இருப்பதால் கட்டுமானத்துக்கு பயன்படுத்த முடியாது என்று தெரிவித்தது. கட்டுமானத்திற்கு உதவாத இறக்குமதி மணலை வாங்கி நாங்கள் என்ன செய்ய முடியும் என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்தது. தூத்துக்குடியில் உள்ள மலேசிய மணலை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. மேலும் மணல் கட்டுமானத்திற்கு உகந்ததா என ஆய்வு செய்து வரும் 16ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 

Label