OUR CLIENTS
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது Posted on 10-May-2018 கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது

பெங்களூரு

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரம் மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. தொகுதிக்கு சம்மந்தம் இல்லாதவர்கள் உடனடியாக  வெளியேறும்படி போலீசார் உத்தரவிட்டுள்ளனர். கர்நாடக சட்டப்பேரவைக்கு 12ம்  தேதி தேர்தல் நடக்கிறது.

கடந்த மாதம்  17ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி 24ம் தேதி நிறைவடைந்தது. 25ம் தேதி  மனுக்கள் மீதான பரிசீலனையும், 27ம் தேதி மனு வாபஸ் பெற கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் பாஜ-224, காங்கிரஸ்-222, மஜத-  201,  அதன் கூட்டணி கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி 18, ஐக்கிய ஜனதா தளம்,  அஇஅதிமுக, கர்நாடக பிரக்ஞாவந்தா ஜனதா கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,  இந்திய கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, எஸ்டிபிஐ உள்ளிட்ட அரசியல் கட்சிகள்,  சுயேட்சைகள் என மொத்தம் 2 ஆயிரத்து 655 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து சோனியா, ராகுல்காந்தி உள்பட பலர் பிரசாரம் செய்தனர்.

பாஜ  வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா உள்பட பலர் பிரசாரம் செய்தனர். மஜத  வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள்  பிரதமர் தேவகவுடா, உத்தர பிரதேச மாநில  முன்னாள் முதல்வர் மாயாவதி, எச்.டி.குமாரசாமி உள்பட பலர் பிரசாரம் செய்தனர். இந்நிலையில், தேர்தல் பிரசாரம் இன்று  மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.  அரசியல்  கட்சி தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் உள்பட தொகுதிக்கு  சம்மந்தம்  இல்லாதவர்கள் இன்று மாலைக்குள் வெளியேறும்படி போலீசார்  உத்தரவிட்டுள்ளனர். மேலும், இத்தேர்தலில் 2 கோடியே 52 லட்சத்து 5  ஆயிரத்து 820 ஆண், 2 கோடியே 44 லட்சத்து 71 ஆயிரத்து 979 பெண் மற்றும் 4  ஆயிரத்து 552  திருநங்கைகள் என மொத்தம் 4 கோடியே 96 லட்சத்து 82 ஆயிரத்து  351 வாக்காளர்கள் வாக்களி்க்கும் உரிமை பெற்றுள்ளனர். 56 ஆயிரத்து 966 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது.

Label