OUR CLIENTS
இந்தியாவிடமிருந்து காஷ்மீரை பிரிக்க முடியாது - போராட்டக்காரர்களுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை
இந்தியாவிடமிருந்து காஷ்மீரை பிரிக்க முடியாது - போராட்டக்காரர்களுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை Posted on 10-May-2018 இந்தியாவிடமிருந்து காஷ்மீரை பிரிக்க முடியாது - போராட்டக்காரர்களுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை

டெல்லி

காஷ்மீரை, இந்தியாவிடமிருந்து பிரிக்க முடியாது என்று ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். மேலும் கல் எறிபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

தேவையில்லாமல் போராட வேண்டாம் என்றும் பிரிவினை கேட்பவர்களுக்கு எதிராக ராணுவம் தொடர்ந்து போராடும் என்றும் கூறினார். மேலும் பிரிவினைவாதிகளின் எண்ணம் நிறைவேறாது என்றார். ராணுவத்தை எதிர்த்து போராட வேண்டும் என நினைத்தால், அதனை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம் என்றார். 

பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க, ராணுவத்தினர் அதிக கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வதாக தெரிவித்தார். பயங்கரவாதிகள் கொல்லப்படக் கூடாது என மக்கள் விரும்பினால், அவர்களை ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு ராணுவத்திடம் சரணடையுமாறு கூறுங்கள் என்றார். பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடும் போது, போராட்டக்காரர்கள் கல் எறிந்து இடையூறு ஏற்படுத்துவதாகவும், இதற்கு பதிலடி கொடுக்கவும் தூண்டி விடுகின்றனர் என்றும் தெரிவித்தார். 

Label