OUR CLIENTS
ஆதார் எண் குடும்ப அட்டை இணைப்பு எதிரொலி - நாடு முழுவதும் ரூ.2.63 கோடி போலி அட்டைகள் நீக்கம்
ஆதார் எண் குடும்ப அட்டை இணைப்பு எதிரொலி - நாடு முழுவதும் ரூ.2.63 கோடி போலி அட்டைகள் நீக்கம் Posted on 10-May-2018 ஆதார் எண்  குடும்ப அட்டை இணைப்பு எதிரொலி - நாடு முழுவதும் ரூ.2.63 கோடி போலி அட்டைகள் நீக்கம்

டெல்லி

 ஆதார் எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால் பல்வேறு துறைகளில் மானியச் செலவு குறைந்துள்ளது என்பது புள்ளி விவரங்களின் மூலம் தெரிய வந்துள்ளது.

ஆதார் எண்களை குடும்ப அட்டைகளுடன் இணைத்ததால் நாடு முழுவதும் 2.63 கோடி போலி அட்டைகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் ஆண்டிற்கு சுமார் 17 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு மிச்சமாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 10 லட்சம் போலி அட்டைகள் நீக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களில் ஆதார் எண்களை இணைத்து நேரடி மானிய உதவி திட்டம் உருவாக்கப்பட்ட பின் இதுவரை ரூ.82,985 கோடி மிச்சம் செய்யப்பட்டுள்ளது. 

சமையல் எரிவாயு திட்டத்தில் இதுவரை 3.85 கோடி போலி வாடிக்கையாளர்கள் கண்டறிந்து நீக்கியதில் ரூ.38,877 கோடி மிச்சமாகியுள்ளது. கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தில், பயனாளிகளின் ஆதார் எண்களை இணைத்ததில் இதுவரை ரூ.15,374 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய சமூக உதவி திட்டத்தில் இதுவரை ரூ.425 கோடி மிச்சமாகியுள்ளது. சிறுபான்மை நலத்துறையில் ரூ.238 கோடி மிச்சமாகியுள்ளது. இதன் மூலம் போலி பயணாளர்களை தவிர்த்து, தகுதியானவர்களுக்கு மட்டும் நலத்திட்டங்களின் பயன்கள் சென்றடைய ஆதார் எண் மிக உதவியாக இருப்பது தெரிகிறது.

Label