OUR CLIENTS
அவகாசம் கோராமல் மே 14ம் தேதி காவிரி வரைவு திட்டம் தாக்கல் செய்யப்படும் - மத்திய அரசு உறுதி
அவகாசம் கோராமல் மே 14ம் தேதி காவிரி வரைவு திட்டம் தாக்கல் செய்யப்படும் - மத்திய அரசு உறுதி Posted on 10-May-2018 அவகாசம் கோராமல் மே 14ம் தேதி காவிரி வரைவு திட்டம் தாக்கல் செய்யப்படும் - மத்திய அரசு உறுதி

டெல்லி

உச்சநீதிமன்ற உத்தரவின்படி மே 14ம் தேதி காவிரி வரைவு திட்டம் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் தெரிவித்துள்ளார்.

காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய மேலும் அவகாசம் கேட்கப்படமாட்டாது என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். ஏற்கனவே கடந்த மே 9ம் தேதி காவிரி மேலாண்மை விவகாரத்தில் என்ன செய்தீர்கள் என்ற தகவலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து மே 14ம் தேதி இது தொடர்பான தகவலை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள்  ஆணையிட்டிருந்தனர்.   

மத்திய அரசும் கால அவகாசமும் 

முன்னதாக காவிரி தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த போது, கர்நாடக தேர்தல் காரணமாக பிரதமரிடமும், மத்திய அமைச்சரவையிடமும் ஒப்புதல் பெற முடியவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய நீர்வளத்துறை கூறியிருந்தது. மேலும் காவிரி குறித்த வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய 10 நாட்கள் அவகாசமும் மத்திய அரசு கோரியிருந்தது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் வருகிற மே 14ம் தேதி திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.  

வழக்கு மீதான எதிர்பார்ப்புகள் அதிகரிப்பு 

கர்நாடக சட்டப்பேரவைக்கு வருகிற 12ம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில், 14ம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.  அன்றைய தினம் வரைவு திட்டம் தாக்கல் செய்யப்படும் என மத்திய நீர்வளத்துறை செயலர் தெரிவித்துள்ளார். பலமுறை உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், மத்திய அரசு வரைவு திட்டத்தை தாக்கல் செய்யாது கால அவகாசம் கோரியிருந்தது அனைவரும் தெரிந்த ஒன்றே.இந்நிலையில் மத்திய நீர்வளத்துறையின்  இந்த அறிவிப்பால்,  வருகிற திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் இந்த வழக்கு மீதான எதிர்ப்பார்ப்புகள் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Label