OUR CLIENTS
அம்பேத்கரை காங். மரியாதையாக நடத்தவில்லை - மோடி குற்றச்சாட்டு
அம்பேத்கரை காங். மரியாதையாக நடத்தவில்லை - மோடி குற்றச்சாட்டு Posted on 10-May-2018 அம்பேத்கரை காங். மரியாதையாக நடத்தவில்லை - மோடி குற்றச்சாட்டு

டெல்லி

 சட்ட மேதை அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி மரியாதையுடன் நடத்தியது கிடையாது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

கார்நாடக தேர்தலை முன்னிட்டு மாநில பாரதிய ஜனதா, எஸ்சி, எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருடன் நமோ ஆப் மூலம் டெல்லியில் இருந்தபடி கலந்துரையாடிய மோடி, காங்கிரஸ் கட்சி அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கவில்லை என்று கூறினார். 

அம்பேத்கரின் வழியில் தேசத்தை வலிமையாக்க தனது தலைமையிலான அரசு பாடுப்பட்டு வருவதாகவும் கூறினார். எஸ்சி மற்றும் எஸ்டி பாதுகாப்பு சட்டத்தை தமது அரசு வலிமையாக்கி இருப்பதாகவும் மோடி குறிப்பிட்டார். சிறுபான்மை, எஸ்சி எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களை எம்.பி.க்களாக்கிய பெருமை பா.ஜ.க. அரசுக்கு சேரும் என்றும் மோடி பெருமிதம் தெரிவித்தார். 

Label