OUR CLIENTS
பெண்கள் மீதான தாக்குதல் பாஜக ஆட்சியில் அதிகரிப்பு - கர்நாடக பிரச்சாரத்தில் ராகுல் பரபரப்பு பேச்சு!
பெண்கள் மீதான தாக்குதல் பாஜக ஆட்சியில் அதிகரிப்பு - கர்நாடக பிரச்சாரத்தில் ராகுல் பரபரப்பு பேச்சு! Posted on 10-May-2018 பெண்கள் மீதான தாக்குதல் பாஜக ஆட்சியில் அதிகரிப்பு - கர்நாடக பிரச்சாரத்தில் ராகுல் பரபரப்பு பேச்சு!

பெங்களூரு

கர்நாடக மாநிலத்தில் ராகுல்காந்தி இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் பேசியபோது, பாஜக ஆட்சியில் பெண்கள் மீது தாக்குதல் அதிகரித்துள்ளதாகவும் அவை அரசியல் மற்றும் தேசிய முக்கியதுவம் வாய்ந்த பிரச்சனை என்றும் தெரிவித்தார்.

ஊழல்வாதிகளை ஆதரிப்பதாக பாஜக மீது குற்றம் சாட்டியுள்ளார். மேலும் விவசாயிகளுக்கு மோடி அரசு நன்மை செய்யவில்லை என்றும் தெரிவித்தார். புல்லட் ரயில் உள்ளிட்டவை குறித்தும் பேசும் பிரதமர் மோடி அடிப்படை பிரச்சனைகள் குறித்து பேச மறுப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.  

தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை அதிகரித்துள்ளதாகவும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாழ்த்தப்பட்டவர்கள் கொல்லப்பட்டபோதும் பிரதமர் மௌனம் காத்ததாக அவர் தெரிவித்தார். கர்நாடக மாநில மக்களின் குரலாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அமைந்துள்ளதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

Label