OUR CLIENTS
கர்நாடகாவில் பிரசாரம் ஓய்ந்தது நாளை காலை வாக்குப்பதிவு தொடங்குகிறது
கர்நாடகாவில் பிரசாரம் ஓய்ந்தது நாளை காலை வாக்குப்பதிவு தொடங்குகிறது Posted on 11-May-2018 கர்நாடகாவில் பிரசாரம் ஓய்ந்தது  நாளை காலை வாக்குப்பதிவு தொடங்குகிறது

பெங்களூரு, மே 11-

கர்நாடக மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றதையொட்டி, மாநிலம் முழுவதும் ஏராளமான தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். 

கர்நாடகா மாநில சட்டசபைக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆனால் ஆட்சியில் அமரப் போவது யார்? என்பதில் பா.ஜ.க.-காங்கிரஸ் இடையே நேரடி பலப்பரீட்சை நடக்கிறது. 
கர்நாடகா தேர்தல் முடிவுகள், அடுத்த ஆண்டு (2019) நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக அமையும் என்று கருதப்படுவதால் அங்கு வெற்றி பெறுவது பா.ஜ.க.- காங்கிரஸ் இரு கட்சிகளுக்கும் மிக, மிக முக்கியமானதாக உள்ளது.

இதன் காரணமாக கடந்த 2 மாதங்களாக கர்நாடகாவில் மிக தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வந்தது. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முதலமைச்சர் சித்தராமையா, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா,  எடியூரப்பா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.  கடந்த 2 மாதமாக நடந்து வந்த அனல் பறக்கும் பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான நேற்று மிகப்பெரிய பிரசார படையை அரசியல் கட்சிகள் களமிறக்கின. 

பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக நிர்மலா சீதாராமன், பிரகாஷ் ஜவடேகர், ஆனந்த் குமார், சதானந்த கவுடா, அனுராக் தாகூர், கிருஷ்ணபால் குஜ்ஜார், மீனாட்சி லேகி, பியூஷ் கோயல் உள்ளிட்ட பல்வேறு மத்திய மந்திரிகள், சத்தீஸ்கர் முதல்வர் ராமன்சிங், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் கவுகார் உள்பட 23 தலைவர்கள் திறந்த வாகனங்களில் சென்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். சித்தராமையாவின் பதாமி தொகுதியில் அமித்ஷா பிரசாரம் மேற்கொண்டார். இதேபோல் மற்ற கட்சிகள் சார்பிலும் நட்சத்திர பேச்சாளர்களுடன் முக்கிய தலைவர்களும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர்.

நேற்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. மாலை 5 மணிக்கு வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்தனர். இன்று(வெள்ளிக்கிழமை) வாக்காளர்களுக்கு சிலிப் வழங்கும் பணி நடைபெறுகிறது. நாளை வாக்குப்பதிவு நடைபெறும். இதையொட்டி தேர்தல் ஆணையம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Label