OUR CLIENTS
கன்னியாகுமரியில் வீணான மெகா சுற்றுலா திட்டம்
கன்னியாகுமரியில் வீணான மெகா சுற்றுலா திட்டம் Posted on 11-May-2018 கன்னியாகுமரியில் வீணான மெகா சுற்றுலா திட்டம்

கன்னியாகுமரி, மே 11-

கன்னியாகுமரி கடற்கரை சாலையில் இருந்து  சன்செட் பாயின்ட் வரை மெகா சுற்றுலா திட்டத்தின் கீழ் கடற்கரையை  அழகுபடுத்தி, பூங்கா அமைக்க ரூ.14 கோடி ஒதுக்கப்பட்டது.

இந்த நிதியில் இங்கு சாலையோரம் சீரமைக்கப்பட்டது. இந்த இடத்தில் பேரூராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. அதன்பின் இங்கு மேம்பாடு பணிகள் எதுவும் நடைபெறவில்லை. தற்போது சீரமைக்கப்பட்ட பகுதியில் அமரவோ, நடந்து செல்லவோ முடியாத நிலை உள்ளது. சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சீரமைக்கப்பட்ட முழு இடத்தையும் வியாபாரிகள் ஆக்ரமித்துள்ளனர். கை வியாபாரிகள், உருண்டு வண்டி வியாபாரிகள் இங்கு கடைகள் அமைத்து கைவினை பொருட்கள், சங்கு மாலை, டீ, தின்பண்டங்கள் என விற்பனை செய்து வருகின்றனர். கடைகள் அதிகளவில் இருப்பதால் அங்கு சுற்றுலா வரும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் அமரமுடியாத நிலை உள்ளது. மேலும் டீ மற்றும் தின்பண்டம் கடைகளில் இருந்து கழிவுகளை இந்த பகுதியில் கொட்டுகின்றனர். அதோடு டீ கப்,  தண்ணீர் பாட்டில், கை துடைக்க பயன்படுத்தும் காகித துண்டுகள் போன்றவற்றை இங்கேயே வீசி விடுகின்றனர். இதனால் இந்த பகுதியில் சுகாதார கேடும் ஏற்படுகிறது.

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்து சீரமைக்கப்பட்ட பகுதி ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் அரசின் நோக்கம் வீணாகிறது. அதோடு சுற்றுலா பயணிகளுக்கு பயன்படாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சுற்றுலா பயணிகளுக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Label