OUR CLIENTS
சிரியாவில் ஈரான் தாக்கியதன் எதிரொலி - 70 ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் பதிலடி
சிரியாவில் ஈரான் தாக்கியதன் எதிரொலி - 70 ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் பதிலடி Posted on 11-May-2018 சிரியாவில்  ஈரான் தாக்கியதன் எதிரொலி  - 70 ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் பதிலடி

டமாஸ்கஸ்

சிரியாவின் கொலான் பகுதியில் இஸ்ரேல் நிலைகள் மீது ஈரான் புதன்கிழமை நள்ளிரவு திடீர் ஏவுகணைத் தாக்குதல் நிகழ்த்தியது. அதற்கு பதிலடியாக, சிரியாவிலுள்ள ஈரான் நிலைகள் அனைத்திலும் விமானங்கள் மூலம் இஸ்ரேல் குண்டுமழை பொழிந்தது.


இஸ்ரேல் படையினர் மீது ஈரானியப் படையினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக இந்தத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் அவிக்டோர் லீபர்மேன் தெரிவித்துள்ளார். சிரியாவில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 23 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் ஏவிய ஏவுகணைகளில் பாதிக்கு மேற்பட்டவற்றை சிரியா வானில் இடைமறித்து வீழ்த்தியதாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


டமாஸ்கஸ், ஹாம்ஸ் உள்ளிட்ட நகரங்களில் உள்ள விமானப் படைத்தளங்கள், ஆயுதக் கிடங்குகள், படை முகாம்கள் ஆகியவற்றின் மீது 70 ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகவும் இவற்றில் பாதிக்கு மேற்பட்ட ஏவுகணைகளை சிரியா இடைமறித்து அழித்ததாகவும் கூறப்படுகிறது. இஸ்ரேலின் தாக்குதலில் சிரியாவைச் சேர்ந்த படைவீரர்கள் 5பேர், ஈரான் ஆதரவுபெற்ற படைவீரர்கள் 18பேர் என மொத்தம் 23பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Label