மியான்மரில் சுஷ்மா 2 நாள் சுற்றுப்பயணம் Posted on 11-May-2018
நே பை தா
இரண்டு நாள் சுற்றுப் பயணமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மியான்மர் சென்றார்.
மியான்மர் தலைநகர் நே பை தா சென்றடைந்த சுஷ்மாமை மியான்மருக்கான இந்திய தூதர் விக்ரம் மிஸ்ரி, மியான்மர் வெளியுறவு அமைச்சர் உ மியிண்ட் து உள்ளிட்டோர் வரவேற்றனர். மியான்மர் நாட்டு தலைவர்களை சுஷ்மா சுவராஜ் சந்தித்து இரு தரப்பு உறவுகளை மேலும் வலுவாக்குவது குறித்து ஆலோசனை நடத்துவார் என்று வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது டிவிட்டரில் தெரிவித்து உள்ளார்.
வன்முறையால் கடுமையாக பாதிக்கப்பட்ட ரக்கைன் மாகாணத்தில் தற்போது நிலவும் சூழல் குறித்து மியான்மர் தலைவர்களுடன் சுஷ்மா ஆலோசிப்பார் என்று தெரிகிறது. சுமார் 6 லட்சம் ரோகிங்கியா அகதிகள், வெளிநாடுகளில் அகதிகளாக புகுந்துள்ளனர்.