OUR CLIENTS
மலேசிய பிரதமராக மகாதிர் முகமது பதவி ஏற்றார் - உலகின் மிக மூத்த தலைவர்
மலேசிய பிரதமராக மகாதிர் முகமது பதவி ஏற்றார் - உலகின் மிக மூத்த தலைவர் Posted on 11-May-2018 மலேசிய பிரதமராக மகாதிர் முகமது பதவி ஏற்றார் - உலகின் மிக மூத்த தலைவர்

கோலாலம்பூர்

மலேசிய பிரதமர் தேர்தலில் 92 வயதான மகாதிர் முகமது ெவற்றி பெற்று புதிய பிரதமராக நேற்று பதிவியேற்றார்.மலேசியா கடந்த 1957ல் சுதந்திரம் பெற்றது.

அப்போது நடைபெற்ற முதல் தேர்தலில் பாரிசன் நேஷனல் (பிஎன்) என அழைக்கப்படும் கட்சி வெற்றி பெற்றது. அதன் பிறகு தொடர்ந்து கடந்த 61 ஆண்டுகளாக இக்கட்சியே தொடர்ந்து யாராலும் அசைக்க முடியாமல் ஆட்சி நடத்தி வந்தது. பல பெருமைகளையும், சாதனைகளையும் கொண்ட இக்கட்சிக்கு தற்போது, பிரதமராக இருந்த நஜீப் ரசாக்கால் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இந்நாட்டின் 14வது பொதுத்தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது.

 இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில், பிரதமர் நஜீப் ரசாக்கின் ஆளும்  பிஎன் கட்சிக்கும், இக்கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் பிரதமருமான  மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணியான பகதான் ஹாரப்பனுக்கும் இடையே  கடும் போட்டி நிலவியது. இதில்,  பிரதமர் நஜீப் தோல்வி அடைந்தார். 222 இடங்களில் 121 இடத்தை பிடித்து மகாதிர் முகமது வெற்றி பெற்றார். இதன் மூலம், 61 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.மலேசிய பிரதமராக மகாதிர் முகமது நேற்றே பதவியேற்றார். இதன் மூலம், உலகின் மிக வயதான தலைவர் என்ற பெருமையை அவர் பெற்றார். 

Label