OUR CLIENTS
ஆஸ்திரேலியன் ஓபன் பேட்மின்டன் பிரனீத், சமீர் வர்மா கால் இறுதிக்கு தகுதி
ஆஸ்திரேலியன் ஓபன் பேட்மின்டன் பிரனீத், சமீர் வர்மா கால் இறுதிக்கு தகுதி Posted on 11-May-2018 ஆஸ்திரேலியன் ஓபன் பேட்மின்டன் பிரனீத், சமீர் வர்மா கால் இறுதிக்கு தகுதி

சிட்னி

ஆஸ்திரேலியன் ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதிப் போட்டியில் விளையாட இந்தியாவின் சாய் பிரனீத், சமீர் வர்மா தகுதி பெற்றுள்ளனர்.

சிட்னியில் நடக்கும் இத்தொடரில் நேற்று நடந்த 2ம் சுற்றுப் போட்டியில் 2ம் நிலை வீரரான சாய் பிரனீத், இந்தோனேஷியாவின் பன்ஜி அகமது மவுலானாவை எதிர்த்து விளையாடினார். இதில் 32 நிமிடங்களில் பிரனீத் 21-12, 21-14 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில், சமீர் வர்மா 21-16, 21-12 என்ற நேர் செட்களில் ஜப்பானின் டாகுமா உவேடாவை வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

 தனது சகோதரரான சவுரவ் வர்மாவை முதல் சுற்றில் வீழ்த்திய டாகுமாவை சமீர் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மகளிர் ஒற்றையர் பிரிவில், 2ம் சுற்றுக்கு முன்னேறிய ஒரே இந்திய வீராங்கனையான வைஷ்ணவி ஜக்கா 5-21, 5-21 என்ற செட்களில் சீனாவின் ஹன் யூயியிடம் தோல்வி அடைந்தார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன்-சோலோக் ராமச்சந்திரன் ஜோடியும், மனு அட்ரி - சுமீத் ஜோடியும் கால் இறுதிக்கு முன்னேறி, நேருக்கு நேர் மோதுகின்றன.

Label