OUR CLIENTS
சிமோனா ஹாலேப்பை வீழ்த்தினார் பிளிஸ்கோவா
சிமோனா ஹாலேப்பை வீழ்த்தினார் பிளிஸ்கோவா Posted on 11-May-2018 சிமோனா ஹாலேப்பை வீழ்த்தினார் பிளிஸ்கோவா

மாட்ரிட்

ஸ்பெயினில் நடந்து வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின், மகளிர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான சிமோனா ஹாலேப்பை வீழ்த்தி கரோலினா பிளிஸ்கோவா அரை இறுதிக்கு முன்னேறினார். 

இத்தொடரின் முதல் கால் இறுதிப் போட்டி நேற்று நடந்தது. இதில், நம்பர்-1 வீராங்கனையான ரோமானியாவின் சிமோனா ஹாலேப், செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவை எதிர்த்து விளையாடினார். முன்னதாக, ஹாலேப், 3வது சுற்றில் பிளிஸ்கோவாவின் இரட்டை சகோதரியான கிறிஸ்டினா பிளிஸ்கோவாவை வீழ்த்தியிருந்தார். இந்நிலையில் நேற்றைய கால் இறுதிப் போட்டியில் கரோலினா பிளிஸ்கோவா 6-4, 6-3 என்ற நேர் செட்களில் ஹாலேப்பை வீழ்த்தி பழிதீர்த்தார். மேலும் முதல் முறையாக மாட்ரிட் ஓபனில் அரை இறுதிக்கு முன்னேறி அசத்தினார்.

 தொடர்ச்சியாக 3வது முறையாக மாட்ரிட் ஓபன் சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பை ஹாலேப் இழந்தார்.  மற்றொரு கால் இறுதியில், ரஷ்யாவின் மரிய ஷரபோவா, நெதர்லாந்தின் கிகி பெர்டென்சை எதிர்த்து விளையாடினார். பரபரப்பாக நடந்த இப்போட்டியில் ஷரபோவா 6-4, 2-6, 3-6 என்ற செட்களில் போராடி தோல்வி அடைந்தார். இந்தாண்டு முதல் முறையாக கால் இறுதி வரை முன்னேறிய ஷரபோவா தோல்வியை சந்தித்துள்ளார்.   முன்னதாக, நேற்று முன்தினம் நடந்த 3ம் சுற்றுப் போட்டியில் 3ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் முகுருசா 2-6, 6-4, 3-6 என்ற செட்களில் ரஷ்யாவின் டாரியா கசாட்கினாவிடம் போராடி தோற்றார்.

Label