OUR CLIENTS
ஐபிஎல் டி20 இன்றைய போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்கம்
ஐபிஎல் டி20 இன்றைய போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்கம் Posted on 11-May-2018 ஐபிஎல் டி20 இன்றைய போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்கம்

 ஜெய்ப்பூர்

 பார்வையற்ற கிரிக்கெட் வீரர்களுக்கும் அங்கீகாரம் வழங்கும் வகையில், ஐபிஎல் போன்ற டி20 லீக் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

ஐபிஎல் போலவே 10 அணிகள் பங்கேற்க உள்ள இத்தொடரை ஆண்டுதோறும் நவம்பர் முதல் டிசம்பர் வரை நடத்தலாம் என ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு வருகிறது. இந்திய பார்வையற்றோர் அணி, இந்தாண்டு நடந்த உலக கோப்பை ஒருநாள் தொடரிலும், 2012, 2017ல் உலக டி20 தொடரிலும், 2015ல் ஆசிய கோப்பை தொடரிலும் சாம்பியன் பட்டம் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

 பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் சர்பிராஷ் அகமதுவிடம் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபடுமாறு ஆசை வார்த்தை கூறியதாக குற்றம்சாட்டப்பட்ட பயிற்சியாளர் இர்பான் அன்சாரியை 2 வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்து ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த அன்சாரி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ளூர் கிளப் அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்து வருகிறார். கடந்த அக்டோபரில் இலங்கைக்கு எதிரான போட்டியின் போது, இவர் சர்பிராஷை சந்தித்து சூதாட்டத்தில் ஈடுபட வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக சர்பிராஷ் உடனடியாக அணி நிர்வாகத்திடம் புகார் செய்தார். 2 வாரத்தில் அன்சாரி பதிலளிக்க ஐசிசி உத்தரவிட்டுள்ளது.

 ஐபிஎல் டி20 தொடரின் பிளே ஆப் சுற்றுப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி இரவு 8 மணிக்கு பதிலாக ஒருமணி நேரம் முன்னதாக இரவு 7 மணிக்கு தொடங்குமென ஐபிஎல் தலைவர் ராஜிவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஒரே டெஸ்ட் கொண்ட தொடர் டப்ளினில் இன்று தொடங்குகிறது. ஐசிசியின் முழு உறுப்பினராகி ஓராண்டுக்கு பிறகு, அயர்லாந்து அணி முதல் முறையாக டெஸ்ட்போட்டியில் விளையாட உள்ளது. மேலும், 2000ம் ஆண்டில் வங்கதேசத்துக்கு பிறகு டெஸ்டில் அறிமுகமாகும் முதல் அணி அயர்லாந்து என்பது குறிப்பிடத்தக்கது.

Label