OUR CLIENTS
முதல் இன்னிங்சே கடைசி ஆட்டமாகி விடுமென நினைத்தேன்’
முதல் இன்னிங்சே கடைசி ஆட்டமாகி விடுமென நினைத்தேன்’ Posted on 11-May-2018 முதல் இன்னிங்சே கடைசி ஆட்டமாகி விடுமென நினைத்தேன்’

புதுடெல்லி

‘கிரிக்கெட்டின் கடவுள்’ என போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். கடந்த 1989ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமாகும் போது அவரது மனநிலை எப்படியிருந்தது என்பது குறித்து தற்போது அவர் பேட்டி அளித்துள்ளார்.

சச்சின் கூறியிருப்பதாவது:

என் வாழ்க்கையின் முதல் இன்னிங்ஸ், கராச்சியில் தொடங்கியது. அந்த முதல் இன்னிங்சே என் கடைசி இன்னிங்சாகி விடுமோ என அப்போது நினைத்தேன். முதல் போட்டி என்பதால், எதுவுமே புரியவில்லை. ஒருபக்கம் யூனிஸ்கான்... மறுபக்கம் வாசிம் அக்ரம் என அசுர வேகத்தில் பந்துவீசிக் கொண்டிருந்தனர். முழுவதுமாக அந்த இடத்திேலயே என் மனநிலை இல்லை.

அப்போது டிரஸ்ஸிங் அறையில் இருந்தவர்கள் எனக்கு அறிவுரை கூறினார்கள். ‘முடிந்த வரை சிறிது நேரம் களத்தில் நிற்க முயற்சி செய்’ என்றனர். அப்போது எனக்குள், ‘இது சர்வதேச கிரிக்கெட். உலகின் சிறந்த பந்துவீச்சு கொண்ட அணியுடன் மோதுகிறோம். அவர்களுக்கான மரியாதையை அளிக்க வேண்டும்’ என கூறிக் கொண்டேன். அந்த டெஸ்டின் 2வது இன்னிங்சில் 59 ரன் எடுத்தேன். அதன்பின்தான் நம்பிக்கையே வந்தது. இவ்வாறு சச்சின் கூறியுள்ளார்.

Label