OUR CLIENTS
மண் ரோட்டில் நடந்து செல்லவோ, இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை!
மண் ரோட்டில் நடந்து செல்லவோ, இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை! Posted on 17-May-2018 மண் ரோட்டில் நடந்து செல்லவோ, இருசக்கர நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை!

வேலூர், மே 17-

காட்பாடி லக்ஷ்மி நகரில் யாரும் நடந்து செல்லவோ, இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை கொண்டு செல்ல கூடாது என்று தினமும் ஒரு குடும்பம் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இது பண்டைய காலங்களில் இருந்த தீண்டாமை  கொடுமை போல செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் பலர் மனம் வெதும்பி புலம்ப ஆரம்பித்துள்ளனர். இதுதொடர்பாக தினந்தோறும் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு வருகிறது. இந்த நகர் தற்போது வளர்ந்து வரும் நகராகும். இங்கு பலர் புதிய வீடுகளை கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் வேளையில் இதுபோன்ற இடையூறுகள் அன்றாடம் தொடர் கதையாகி வருகிறது. இவர்கள் நாங்கள் திமுகவை சேர்ந்தவர்கள் என்று மிரட்டும் தொனியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வழியாக பலர் டிராக்டர்களில் எரு லோடு, மண் லோடு, செங்கல் லோடு, ஜல்லி லோடுகள் கொண்டு செல்பவர்களை தடுத்து நிறுத்துவது, அந்த கனரக வாகனங்களில் முன் சக்கரங்களுக்கு குறுக்கே பெரிய பாறாங்கற்களை போட்டு வாகனங்களை நிறுத்தி தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிகழ்வு தினமும் நடந்து வருகிறது. மாநகராட்சிக்கு சொந்தமான சாலையை சொந்தம் கொண்டாடி வருகின்றது ஒரு குடும்பம், இந்த சாலையை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று மிரட்டல் வேறு விடுக்கின்றனர். பள்ளிக்குப்பம் என்ற பெயரை சொல்லி பாகிஸ்தான் போன்று பயமுறுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையை அங்கு வீடு கட்டியுள்ள அனைவரும் நன்கு அறிவார்கள். இந்த பிரச்னையை காவல் துறையினர் அறிந்து கொண்டு இதுநாள் வரை கண்டும் காணாமல் இருந்து வந்தார்களா? என்ற கேள்வி எழச் செய்துள்ளது. இது எங்கள் இடம் என்று உரிமை கொண்டாடும் நிலை இந்த பகுதியில் நிலவி வருகிறது. இந்த நிலை முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அத்துடன் நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதுகுறித்து தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவல் துறை துணைத்தலைவர் வேலூர் சரகம் ஆகியோருக்கும், வேலூர் மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர் இந்தப்பகுதியில் இந்த பிரச்னையால் வாடும் குடியிருப்புவாசிகள். இந்த பிரச்னை நீண்டகாலமாக இருந்து வருவதாக அந்தப்பகுதி வாழ் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து தனிப்பிரிவு போலீசார் மற்றும் தனிப்பிரிவு சிஐடி போலீசார் விசாரணை நடத்த முன்வர வேண்டும். மாநகராட்சி நிர்வாகமும் அனைத்து சாதி, மத, இன மொழி பேசும் மக்கள் நலன் கருதி ஆதிக்கசாதியினரை யார் பிரச்னைக்கும் செல்லாத வகையில் பிரச்னைக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது. அத்துடன் வீடுகளை சுற்றி செடி, கொடிகளை வளர்க்கும் போர்வையில் பல தில்லாலங்கடி வேலைகளை கனகச்சிதமாக ஒரு சாரர் செய்து வருகின்றனர். வீடுகளின் மேல் நின்று கொண்டு சாலையில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் விடுவது போன்று பிரச்னையை ஏற்படுத்த ஒரு டுபாக்கூர் முயற்சி செய்து வருகிறார். இவருக்கு அந்த குடும்பம் பின்புலமாக இருப்பதாக கூறப்படுகிறது. 

இவ்வாறாக அந்த நகரை சேர்ந்தவர்களை மிரட்டி பணிய வைக்க பார்க்கிறது திமுக குடும்பம் என்று சொன்னால் அது மிகையாகாது. சுதந்திரம் அடைந்து இன்னமும் அடிமைத்தனமாக மற்றவர்களை நடத்த ஒரு குடும்பம் முயற்சிப்பது எந்த வகையில் நியாயம். அவரவர் வேலையை பார்த்து கொண்டு செல்லாமல் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவது ஏன்? என்பதே இன்று லக்ஷ்மி நகர் மக்கள் முன் இருக்கும் விடைதெரியாத கேள்வியாகும்.  இதுகுறித்து சோர்ஸ் ரிபோர்ட் அனுப்ப காவல் துறை தயக்கம் காட்டுவது ஏன்?. இதுவும் ஒருவகை அடிமைத்தனமான பிரச்னைக்கு வழிவகுக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. பாதை பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மாநகராட்சி முனைப்பு காண்பிக்க வேண்டும். பெயர் பலகை வைத்து இந்த பிரச்னைக்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது. இல்லையெனில் மாநகராட்சி, நகராட்சி முறை மன்ற நடுவத்தில் புகார் கொடுக்க பாதிக்கப்பட்டுள்ளோர் ஆயத்தமாகி வருகின்றனர். மண்டல அலுவலகம் 1ன் அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Label