OUR CLIENTS
சென்னையில் 22ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்
சென்னையில் 22ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் Posted on 21-May-2018 சென்னையில் 22ம் தேதி  மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்

சென்னை, மே 21-
   
காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் வருகிற 22ம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடை பெறும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.  

காவிரி நதிநீர் பிரச்சினை தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் கடந்த 17ம் தேதி நடைபெறும் என்று எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.  ஆனால் அன்று காவிரி பிரச்சினை குறித்து வழக்கு விசாரணை நடந்ததால் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டதாகவும் கூட்டம் நடை பெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் வருகிற 22ம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடை பெறும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். கூட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.  காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைசிறுத்தை கட்சி தலைவர்திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு தலைவர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். 

Label