OUR CLIENTS
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்!
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்! Posted on 24-May-2018 திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி  மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்!

தூத்துக்குடி, மே 24-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருவதால் இணைய தளங்கள் முடக்கப் பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் நடைபெற்று வரும் போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் முதலில் தடியடி நடத்தினர், அதிலும் போராட்ட காரர்கள் போராட்டத்தை நிறுத்த வில்லை, இதனையடுத்து போலீசார் துப்பாக்கிச்சூட்டிற்கு உள்ள விதிமுறைகளை மீறி இதுவரை 12 பேரை சுட்டுக் கொன்றுள்ளனர்.

இதனையடுத்து தூத்துக்குடி போராட்டம் நாடு முழுவதும் பரவியுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடியில் போராட்டம் கட்டுப் பாட்டிற்குள் வரவில்லை என்பதால் நாளை துணை ராணுவம் தூத்துக்குடிக்கு வர உள்ளது. இதனையடுத்து போ ராட்டத்திற்கு முக்கிய காரணமான இணையதளத்தை முடக்க அரசு திட்டமிட்டது. மாநில உள்துறை உத்தரவை அடுத்து காஷ்மீரில் போராட்டக் காரர்களை ஒடுக்குவது போன்று இணையதள சேவை முடக்கப் பட்டுள்ளது.

Label