OUR CLIENTS
ஸ்ரீ காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ஸ்ரீ காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் Posted on 25-May-2018 ஸ்ரீ காமாட்சியம்மன்  கோயில் கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை, மே 26-

திருவண்ணாமலை அடுத்த இராந்தம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சியம்மன்  கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.  

விழாவில் வியாழக்கிழமை மாலை முதற்கால யாகசாலை பூஜை, ஹோமங்கள், தீபாராதனை  உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.   வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு  2 -ஆம் கால யாகசாலை மகா பூர்ணாஹுதி, கலச புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன .   காலை 9  மணியளவில் ஸ்ரீ காமாட்சியம்மன் சுவாமிக்கு  அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.   இதை தொடர்ந்து  வெள்ளிக்கிழமை முதல் 31 -ம் தேதி வரை ஏழு நாட்கள் வீரவன்னிய நாடகம் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் இராந்தம் சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்துக்கொண்டனர்.

Label