OUR CLIENTS
அமமுக கூடுதல் தலைமைக் கழக நிர்வாகிகள் நியமனம் டிடிவி தினகரன் அறிவிப்பு
அமமுக கூடுதல் தலைமைக் கழக நிர்வாகிகள் நியமனம் டிடிவி தினகரன் அறிவிப்பு Posted on 03-Jun-2018 அமமுக கூடுதல் தலைமைக் கழக நிர்வாகிகள்  நியமனம்   டிடிவி தினகரன் அறிவிப்பு

சென்னை,  ஜூன் 3-

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் கூடுதல் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளை, கழக துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான   டிடிவி தினகரன் இன்று நியமித்துள்ளார். இவர்களுக்கு, கழக உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

கழகப் பொதுச்செயலாளர் சசிகலா வழிகாட்டுதலின்படி செயல்படும் துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான  டிடிவி தினகரன், இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கூடுதல் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் இன்று முதல் நியமிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

கழக அமைப்புச் செயலாளர்களாக கே.டி. பச்சைமால், பி.ஜி. நாராயணன், சி.ஞானசேகரன், என்.ஆர். அப்பாதுரை, எஸ். சிவராஜ்,   சிவா. ராஜமாணிக்கம், டி. பாளை அமரமூர்த்தி,

கழக தேர்தல் பிரிவு துணைச் செயலாளராக   க. மலர்வேந்தன்

கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளராக திரு. துரைமணிவேல், துணைச் செயலாளராக   அண்ணாதுரை,

கழக எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளராக   டேவிட் அண்ணாதுரை,

கழக மகளிரணி செயலாளராக திருமதி. வளர்மதி ஜெபராஜ்,

கழக வழக்கறிஞர் பிரிவு தலைவராக   கு. சீனிவாசன்,

கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு தலைவராக  எக்ஸ். லெனின், 

செயலாளராக  கே. தம்பி இஸ்மாயில், இணைச் செயலாளராக  தாராஷபி அபிபுல்லா, 

கழக மருத்துவரணி துணைச் செயலாளராக டாக்டர் நவீன் பாலாஜி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

கழக உடன்பிறப்புகள், இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என கழக துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான  டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Label