OUR CLIENTS
பள்ளி ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை - செங்கோட்டையன் தகவல்
பள்ளி ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை - செங்கோட்டையன் தகவல் Posted on 03-Jun-2018 பள்ளி ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை -  செங்கோட்டையன் தகவல்

சென்னை,  ஜூன் 3-

தமிழக பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் கைரேகை வருகை பதிவு முறை அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேசிய அவர் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு பள்ளிக் கல்வித்துறையில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாணவர்களுக்கு வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டுகளில் ஆதார் எண், ரத்தவகை குரூப், தொலைபேசி எண் இணைக்கப்படும்.
மாணவர்களின் பள்ளிக்கூட வருகைப் பதிவு மதியத்திற்குள் சென்னை தலைமை அலுவலகத்திற்கு வந்துவிடும் எனவும் அமைச்சர் தகவல் தெவித்துள்ளார்.

பயோமெட்ரிக் கைரேகை வருகை பதிவு முறை மாணவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Label