OUR CLIENTS
செய்தியாளர் நரேஷ் மறைவுக்கு NJU தலைவர் கா.குமார் இரங்கல்!
செய்தியாளர் நரேஷ் மறைவுக்கு NJU தலைவர் கா.குமார் இரங்கல்! Posted on 04-Jun-2018 செய்தியாளர் நரேஷ் மறைவுக்கு NJU  தலைவர் கா.குமார் இரங்கல்!

வேலூர், ஜூன் 4-
மக்கள் தொலைக்காட்சி செய்தியாளர் தாம்பரம் நரேஷ் மறைவுக்கு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியனின் அகில இந்திய தலைவர் கா.குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரத்தைச் சேர்ந்தவர் நரேஷ். இவர் மக்கள் தொலைக்காட்சியின் செய்தியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று  அவர் அகால மரணமடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் அகில இந்திய தலைவர் கா.குமார் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார். 

இதுகுறித்து கா.குமார் மேலும் கூறியதாவது, மக்கள் தொலைக்காட்சி செய்தியாளர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். இளம் செய்தியாளராக வலம் வந்தவர். செய்திகளை கையாள்வதில் நேர்த்தியாக செயல்பட்டார். துடிதுடிப்பு மிக்க இளைஞர் ஆவார். அவர் இந்த இளம்வயதில், தமிழ் மொழி மீது பற்று கொண்டவராக விளங்கினார். அவரது இழப்பு,  ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும். அவரை இழந்து வாடிக் கொண்டிருக்கும் அவரது குடும்பத்தாருக்கும், மக்கள் தொலைக்காட்சியின் சக ஊழியர்கள் அனைவருக்கும், ஆழ்ந்த இரங்கலை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன். 

செய்தியாளர் நரேஷை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும், அவரது ஆன்மா இறைவனடி சேரவேண்டும் என்றும் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் அகில இந்திய தலைவர் மற்றும் காலச்சக்கரம் நாளிதழ் நிறுவனருமான கா.குமார் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Label