OUR CLIENTS
பிரதமர் மோடிக்கு அனுப்பப்பட்ட “9 பைசா” செக்!
பிரதமர் மோடிக்கு அனுப்பப்பட்ட “9 பைசா” செக்! Posted on 06-Jun-2018 பிரதமர் மோடிக்கு அனுப்பப்பட்ட “9 பைசா” செக்!

ஹைதராபாத், ஜூன் 6-

நடந்து முடிந்த கர்நாடகத் தேர்தலையொட்டி கடந்த ஏப்ரல் மாதம் 19&ம் தேதி முதல் மே 14&ம் தேதி வரை பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை.

ஆனால், கர்நாடகாவில் தேர்தல் முடிந்த பின், தொடர்ந்து 15 நாட்களாக எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்திக் கொண்டே வந்தன. இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதமர் மோடிக்கு இளைஞர் ஒருவர் “9 பைசா” மதிப்புக்கு செக் அனுப்பிய விவகாரம் தற்பொழுது அரங்கேறியுள்ளது. தெலங்கானா மாநிலம் ராஜன்னா சர்சில்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்து கவுட். இவர்தான் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதமர் மோடிக்கு 9 காசு காசோலையை அனுப்பியுள்ளார்.

Label