OUR CLIENTS
ரபேல் போர் விமான முறைகேடு அடிப்படை ஆதாரமற்றது
ரபேல் போர் விமான முறைகேடு அடிப்படை ஆதாரமற்றது Posted on 06-Jun-2018 ரபேல் போர் விமான முறைகேடு அடிப்படை ஆதாரமற்றது

புதுடெல்லி, ஜூன் 6-

ரபேல் போர் விமானம் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக கூறுவது ஆதாரமற்றது என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர் ரபேல் போர் ரக விமானம் வாங்கியதில் முறைகேடு ஏதும் நடக்கவில்லை என மறுப்பு தெரிவித்தார். ராணுவத்திற்கு வெடிபொருட்கள் பற்றாக்குறை ஏதும் இல்லை என்றார். வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு ராணுவத்திற்கென தற்போது அதிக நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இந்திய & பாகிஸ்தான் இடையிலான உறவில் மிக கவனமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். எல்லைப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மத்திய அரசு மதிப்பதாக குறிப்பிட்டார். அதேசமயம் பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல் நடத்தும் போது அதற்குரிய முறையில் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருவதாகவும் அவர் கூறினார். 

ஒரு பக்கம் தீவிரவாதம் மறுபக்கம் அமைதி பேச்சு என பாகிஸ்தானின் போக்கு சரியானது அல்ல என்றார். தீவிரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் நடைபெற முடியாது என்றும், இவ்விகாரத்தில் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மாவின் கருத்தை தாம் ஆமோதிப்பதாகவும் நிர்மலா சீதாராமன் பதில் கூறினார். 119 கண்டோன்மென்ட் சாலையில் 80 சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

Label