OUR CLIENTS
பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் Posted on 07-Jun-2018 பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

புதுடெல்லி, ஜுன் 7-

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார்.

கவர்னர்கள் மாநாட்டில் பங்கேற்க தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கடந்த சில தினங்களுக்கு முன்  டெல்லி சென்றார். ஆளுநர் மாநாடு நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், நேற்று டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். இந்த நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இன்று  பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். காலை 10.30 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறுகிறது. 

Label