OUR CLIENTS
பணியாளர் நியமனத்தில் முறைகேடு முதல்வர் மீது சிபிஐ வழக்குப்பதிவு
பணியாளர் நியமனத்தில் முறைகேடு முதல்வர் மீது சிபிஐ வழக்குப்பதிவு Posted on 07-Jun-2018 பணியாளர் நியமனத்தில் முறைகேடு முதல்வர் மீது சிபிஐ வழக்குப்பதிவு

மும்பை, ஜுன் 7-

பணியாளர்களை நியமித்ததில் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி புனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமி முதல்வர் ஓம் பிரகாஷ் சுக்லா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் காடக்வாஸ்லா என்ற இடத்தில் தேசிய பாதுகாப்பு அகாடமி இயங்கி வருகிறது. ராணுவ அதிகாரிகள் இங்கு படித்து பயிற்சி பெற்ற பின்னரே பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த அகாடமியில் கடந்த 2011&ம் ஆண்டு முதல் ஓம் பிரகாஷ் சுக்லா என்பவர் முதல்வராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், அகாடமியில் பணியாளர் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக ஓம் பிரகாஷ் சுக்லா மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விரைவில் இது தொடர்பாக விசாரணை தொடங்க உள்ளது.

Label