OUR CLIENTS
தவறாக வழிநடத்தப்படும் ஜம்மு-காஷ்மீர் இளைஞர்கள்
தவறாக வழிநடத்தப்படும் ஜம்மு-காஷ்மீர் இளைஞர்கள் Posted on 08-Jun-2018 தவறாக வழிநடத்தப்படும்  ஜம்மு-காஷ்மீர் இளைஞர்கள்

ஸ்ரீநகர், ஜுன் 8-

காஷ்மீரில் உள்ள அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் ராஜ்நாத்சிங் தெரிவித்து உள்ளார்.

 உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இரண்டு நாள் பயணமாக காஷ்மீர் சென்றுள்ளார். காஷ்மீர் தலைநர் ஸ்ரீநகரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியதாவது:- “ எத்தனை இடையூறுகள் வந்தாலும் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டும் எங்கள் இலக்கில் இருந்து நாங்கள் விலக போவது இல்லை. ராணுவம், போலீஸ் உட்பட பாதுகாப்பு படையினர் கூடிய அளவு சாந்தமாக  செயல்படுகின்றனர் என்பதை சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. 
பிரிவினைவாதிகள் எந்த வகையான அரசியலும் செய்யட்டும். ஆனால், இங்குள்ள குழந்தைகளின் எதிர்காலத்தோடு விளையாட வேண்டாம். இந்த குழந்தைகள் காஷ்மீரின் குழந்தைகள் மட்டுமல்ல. இந்தியாவின் குழந்தைகள். குழந்தைகள் இந்தியாவின் சொத்துக்கள். இதை மனதில் வைத்தே, முதல் முறையாக கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான வழக்குகளை திரும்ப பெற்றுள்ளோம்.  

உங்கள் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை வழங்கிவிட்டு, பிறரின் குழந்தைகளின் கைகளில் கற்களை திணிப்பதா? திறமை மிக்க இளைஞர்கள் இங்குள்ளதை நான் பலமுறை உணர்ந்து இருக்கிறேன். இதற்கு ஐஏஎஸ், ஐஐஎம் தேர்வு முடிவுகளே சான்றாகும். சில சக்திகளால் இளைஞர்கள் திசை திருப்பப்படுகின்றனர். அனைத்து தரப்பினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராக இருக்கிறோம். காஷ்மீரின் விதியையும் முகத்தையும் நாங்கள் மாற்றுவோம்" இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Label