OUR CLIENTS
அதிமுகவின் புதிய சட்ட விதிகளுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல்
அதிமுகவின் புதிய சட்ட விதிகளுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் Posted on 11-Jun-2018 அதிமுகவின் புதிய சட்ட விதிகளுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல்

சென்னை, ஜுன் 11-

அதிமுக-வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கி, கட்சியின் விதிகளில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து, விரைவில் தேர்தல் நடத்தப்படும் என அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக-வில் பிரிந்த ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள், கடந்த ஆண்டில் இணைந்தன. இதனைத் தொடர்ந்து, அதிமுக-வின் பொதுக்குழுக் கூட்டம், கடந்த ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி நடைபெற்றது. இதில், கட்சியின் பொதுச் செயலாளர் பதவியோடு, ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் தேர்வுசெய்யப்பட்டனர். இதற்காக கட்சியின் விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன.

மேலும் இதனை தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்கு ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் அனுப்பிவைத்தனர். இந்நிலையில், புதிய திருத்தங்களுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. கட்சியில் உறுப்பினர் சேர்க்கைப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து, பொதுக் குழு கூட்டப்படும் என்றும், புதிய ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்படுவார் என்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். தேர்தல் கமி‌ஷன் முடிவுக்கு டி.டி.வி. தினகரனின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் தேர்தல் கமி‌ஷனின் அங்கீகாரத்தை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Label