OUR CLIENTS
தமிழகத்தில் உள்ள 37 ஆயிரம் கோயில்களில் 1 லட்சம் சிலைகள்: கணக்கெடுக்க ஒரே அலுவலர்!
தமிழகத்தில் உள்ள 37 ஆயிரம் கோயில்களில் 1 லட்சம் சிலைகள்: கணக்கெடுக்க ஒரே அலுவலர்! Posted on 11-Jun-2018 தமிழகத்தில் உள்ள 37 ஆயிரம் கோயில்களில் 1 லட்சம் சிலைகள்: கணக்கெடுக்க ஒரே அலுவலர்!

சென்னை, ஜூன் 11-

தமிழகத்தில் உள்ள கோயில்களில் இருக்கும் சிலைகள் கடத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், அனைத்து சிலைகளையும் கணக்கெடுத்து புகைப்படங்களுடன் பதிவு செய்து வைக்க இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை முடிவு செய்துள்ளது.

தமிழகக் கோயில்களில் இருக்கும் பல ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சிலைகள் கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் மிகச் சிறந்த முதல் நடவடிக்கையை இந்திய தொல்லியல் துறை முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கதுதான்.

ஆனால், தமிழகத்தின் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் 37 ஆயிரம் கோயில்களில் இருக்கும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சிலைகள் ஒவ்வொன்றையும் நேரில் பார்த்து கணக்கெடுக்கும் பணிக்காக தொல்லியல் துறையின் கண்காணிப்பாளர் பதவியை வகித்து வரும் ஒரே ஒரு அதிகாரி மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த 37 ஆயிரம் கோயில்களில் இருந்து இதுவரை சுமார் 1,200 சிலைகள் கடத்தப்பட்டிருப்பதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஏராளமானவை வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட முக்கிய நாடுகளின் அருங்காட்சியகம், சிலைகளை சேகரிப்போரிடம் இருந்து 20க்கும் மேற்பட்ட சிலைகளை தமிழகம் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாட்டில் இருக்கும் பழங்கால சிலைகள் அனைத்தும் கணக்கெடுக்கப்பட்டு, அவற்றுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுவிட்டால், அவை சட்டவிரோதமாக நாட்டில் இருந்து கடத்திச் செல்லப்படுவது தவிர்க்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறார்கள்.

தற்போது பணியமர்த்தப்பட்டுள்ள தொல்லியல் துறை அதிகாரி, ஒவ்வொரு கோயிலாகச் சென்று அங்கிருக்கும் சிலைகளைக் கணக்கெடுத்து, அவற்றை புகைப்படமும் எடுத்து, தகவல்களை பதிவு செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த பணிக்கு ஒரே ஒரு அதிகாரியை நியமித்திருப்பது ஏற்கத்தக்கது அல்ல என்றும் மேலும் சில அதிகாரிகளை பணியமர்த்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

இதேப்போன்று சிலைகளைக் கணக்கெடுக்கும் பணி சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி பாதியில் கைவிடப்பட்டதாகவும், பல கோயில்களில் இருக்கும் பழங்கால சிலைகள் கல் மற்றும் உலோகங்களால் செய்யப்பட்டவையாக இருப்பதும், பல சிலைகள் பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
தஞ்சை பெரிய கோயில் இருந்த ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவின் ஐம்பொன் சிலைகள் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்டவை. இவை குஜராத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்து தமிழ்நாடு காவல்துறை மீட்டு தமிழகம் கொண்டு வந்தது. இவை 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Label