OUR CLIENTS
தமிழகத்தில் தனியார் பள்ளி தாளாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்!
தமிழகத்தில் தனியார் பள்ளி தாளாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்! Posted on 12-Jun-2018 தமிழகத்தில் தனியார் பள்ளி தாளாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்!

வேலூர், ஜூன் 12-

தமிழகத்தில் தனியார் பள்ளி தாளாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனால் கல்வித்துறையில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆட்சிகாலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தார் கே.ஏ.கிருஷ்ணசாமி. அந்த காலக்கட்டத்தில் சென்னையில் பால் தட்டுப்பாடு அதிகளவு இருந்தது. குழந்தைகள் குடிக்க கூட பால் இல்லையே என்று என்று எதிர்கட்சிகள் மேடைக்கு மேடை பேசினார்கள். இதை கேட்ட எம்ஜிஆர் , கே.ஏ.கிருஷ்ணசாமியை அழைத்து ஈரோட்டில் பொள்ளாச்சி மகாலிங்கம் அதிகளவு பால் பண்ணை வைத்திருக்கிறார். அவருக்கு வேண்டியவர் கே.ஏ.செங்கோட்டையன். அவரை அழைத்துப் பேசுங்கள். இந்த பிரச்னைக்கு உடனே தீர்வு வரும் என்று எம்ஜிஆர் சொன்னதால் அப்படியே செய்தார் கே.ஏ.கிருஷ்ணசாமி.

அந்த நேரம் கே.ஏ.செங்கோட்டையனுக்கும் கே.ஏ.கிருஷ்ணசாமிக்கும் ஒரு நட்பு வளர்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் அன்றைக்கு முத்துசாமியின் கை சற்று ஓங்கி இருந்தது. அவருக்கு ராணா என்ற தொழிலதிபர் உதவி செய்ததால் முத்துசாமி தன்னை வளர்த்து கொண்டார். அதற்கு பின்னால் எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அதிமுகவில் ஜா., ஜெ., என்று அணி இரண்டாக பிரிந்தது. அந்த காலகட்டத்தில் முத்துசாமி ஜா அணியில் இருந்ததால் செங்கோட்டையனை பற்றி அறிய ஜெ., ஒருவரை தூது அனுப்பினார். அந்த நபர் செங்கோட்டையனை நேரில் சந்தித்து நீங்கள் எந்த அணியில் இருக்கிறீர்கள் என்று கேட்டபோது நான் உடம்பில் ஒரு பொட்டு ரத்தம் இருக்கும் வரை( சொட்டு இல்லை பொட்டு) அம்மா உடன்தான் இருப்பேன் என்று சொன்னதை மைக்ரோ டேப்ரெக்கார்டரில் பதிவு செய்து ஜெயலலிதாவின் பார்வைக்கு கொண்டு வந்தபோது ஜெயலலிதா தன்னுடன் இருந்தவர்களிடம் அதை போட்டு காண்பித்தார். இது செங்கோட்டையன் குரல் என்று ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள் அழுத்தமாக சொன்னார்கள். ஜெயலலிதா மறுமுறையும் அந்த மைக்ரோ டேப்ரெக்கார்டரை போட்டு பார்த்துவிட்டு இது செங்கோட்டையன் குரல்தான் என்று அம்மா உறுதியாகச் சொன்னார்.

காரணம் பொதுவாக எல்லோரும் ஒரு சொட்டு ரத்தம் என்றுதான் என்று சொல்வார்கள். ஒரு பொட்டு ரத்தம் என்பது ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன் என்று அழுத்தமாகச் ஜெயலலிதா சொன்னதால் ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையனின் வளர்ச்சி அதிகமாவிட்டது. ஒரு காலகட்டத்தில் சட்டசபையில் நடந்த மோதலுக்கு பின்னால் ஜெயலலிதா சென்னை ரேவதி மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டிருந்தார். அவரை காண செங்கோட்டையன் வந்தபோது காவல்துறை அவரை கைது செய்த முயற்சி எடுத்தார்கள். அதை தெரிந்து கொண்ட செங்கோட்டையன் ஜெயலலிதாவிடமே நடந்ததை சொல்ல, நீங்கள் வெளியே போக வேண்டாம். இந்த மருத்துவமனையிலே அட்மிட்டாகி கொள்ளுங்கள் என்று செங்கோட்டையனிடம் சொல்லி ஜெயலலிதா அட்மிஷன் செய்ய வைத்தார்.

காவல்துறை மருத்துவமனையை வட்டமிட்டது. இதைக் கண்ட செங்கோட்டையன் மீண்டும் அம்மாவிடம் சென்று நான் கோபிக்கே போய்விடுகிறேன். எனக்கு அங்கு அதிகம் பாதுகாப்பு இருக்கு என்று சொன்னதால் அம்மா அனுமதி தரவே அத்தனை காவலையும் மீறி செங்கோட்டையன் கோபிக்குச் சென்றுவிட்டார். அடுத்த கட்டத்தில் 1991ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் செங்கோட்டையனுக்கு அதிகளவு பொறுப்புகளை ஜெயலலிதா தந்திருக்கிறார். 

எதை செய்தாலும் அம்மா இட்ட கட்டளையை சரியாக செய்து முடிக்கும் வல்லமை பெற்றவர். 1989ம் ஆண்டு 1991ம் ஆண்டுகளில் தேர்தல் சுற்றுப்பயணத்தை வழிநடத்தும் பொறுப்பேற்று கொண்டார். அந்த நேரம் ஜெயலலிதா சொன்னார் ஒரு இடத்துக்கு போனால் அதே வழியில் திரும்பி வரக்கூடாது. அந்த அளவுக்கு சுற்றுப்பயணத்தை நடைமுறைப்படுத்துங்கள் என்று சொன்னதால் அனுபவம் வாய்ந்த நண்பர்களை கூடவே வைத்துக் கொண்டு தமிழ்நாடு வரைபடத்தை வைத்துக் கொண்டு சுற்றுப்பயணத்தை சிறப்பாகச் செய்தவர். அதுமட்டும் அல்லாது 1989ம் ஆண்டு அதிக எம்எல்ஏக்களையே ஈரோடு மாவட்டம்தான் பெற்றுத்தந்தது.

எதை செய்தாலும் அம்மா சொன்னவுடன் அதை செய்து முடிக்கும் திறமை அவருக்கு இருந்ததால் அம்மா சுற்றுப்பயணம் முழுவதற்கும் அவரே உடன் சென்றார். இப்படி பல வரலாற்றைச் செய்ததால் 1991ம் ஆண்டு ஆட்சியை அதிமுக கைப்பற்றியபோது செங்கோட்டையன் போக்குவரத்து துறை அமைச்சரானார். அதேநேரம் முத்துசாமியும் அமைச்சரானார். ஒருநாள் இரவு ஊரில் உள்ள தனது தொகுதி நிர்வாகிகளை அழைத்து நீங்கள் எனக்கு ஒதுக்கப்பட்ட துறையில் வேலை இருந்தால் எங்களிடம் வாருங்கள். அதேநேரம் முத்துசாமி துறையில் வேலை இருந்தால் அவரிடம் செல்லுங்கள். நாங்கள் இருவரும் அம்மாவின் ஆட்கள்தான் என்று அந்த தொண்டர்களிடம் யார் மீதும் பகை குணம் இல்லாது இருக்க வேண்டும் என்று நேரடியாகவே சொன்னார் செங்கோட்டையன்.
ஒரு காலகட்டத்தில் செங்கோட்டையன் அதிகாரம் குறையாத அளவு இருப்பதை கண்டதால் செல்வகணபதிக்கு கொம்பு சீவி செங்கோட்டையனுடன் மோத விட்டார்கள். இரண்டு பேர்களுக்கும் இடையே பகை இருப்பதை தெரிந்து கொண்ட ஜெயலலிதா தன் உதவியாளர் கணேசன் ஐஏஎஸ்ஸையும், சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவையும் , அமைச்சர் அழகு திருநாவுக்கரசையும் செங்கோட்டையன் வீட்டுக்கு அனுப்பி அங்கு செல்வகணபதியை அழைத்து என்ன நடந்தது என்பதை ஜெயலலிதா விசாரிக்கச் சொன்னதாக சொன்னதால் இரவு 11 மணிக்கு அந்த கூட்டம் முடிந்தது. விசாரித்த கணேசன் ஐஏஎஸ் அதிகாரி அம்மாவிடம் நடந்ததை சொன்னதால் செல்வகணபதியின் பதவி பாதிக்கப்பட்டதாக அன்று சொன்னார்கள். அடுத்து கண்ணப்பன் போட்டி அதிமுகவை தொடங்கிய காலத்தில் நம் அணிக்கு செங்கோட்டையனும் வருவார் என்று கண்ணப்பன் பேசியபோது, ஜெயலலிதா சொன்னார், நிச்சயமாக செங்கோட்டையன் என்னை விட்டு போகமாட்டார் என அழுத்தமாகச் சொல்லி வந்தார். அந்த காலகட்டத்தில்தான் திமுக அரசு அம்மா முதல் அத்தனை பேர் மீதும் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை எதிர் கொண்டார்கள். 

அடுத்து 2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கோபி சட்டசபை தொகுதியை வேறு ஒருவருக்கு (சிந்து ரவிச்சந்திரனுக்கு) விட்டுத்தர முடிவு செய்திருந்தார்கள். இந்த தகவல் பிடிசி பழனி வாயிலாக செங்கோட்டையனுக்கு இரவோடு இரவாக தெரிவித்ததால் செங்கோட்டையன் அம்மாவை சந்தித்தார். அம்மா அந்த தடைகளை உடைத்து கோபி தொகுதியை செங்கோட்டையனுக்கே விட்டு தந்தார். அம்மா உடன் நெருக்கமாக இருந்ததால் அவரை பிரிக்க பல வழிகளில் பலவிதத்தை கையாண்டார்கள். கடைசியாக அவர் மனைவி, மகன், மருமகள், பேரன் ஆகிய 4 பேரும் அம்மாவை சந்திக்க அனுமதி வாங்கி தந்தார்கள். அவர்கள் அம்மாவை சந்தித்து என்ன சொன்னார்கள் என்பதை நம்மால் அறியமுடியவில்லை. அதேநேரம் அந்த காலகட்டத்தில் செங்கோட்டையன் இந்தியாவில் உள்ள முக்கியமான அத்தனை கோயில்களுக்கும் சென்று வந்ததாக அம்மாவிற்கே ஒரு தகவல் வந்தது. யாரைப்பற்றியும் எதுவும் பேசாமல் தன் அரசியல் பயணத்தை பல சோதனைகளுக்கு நடுவே கடந்து வந்தார்.
இன்றைக்கு அம்மா மறைவுக்கு பின்னும் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்து நல்ல நிர்வாகத்தை தந்து கொண்டிருக்கிறார். ஜெயலலிதாவின் மறைவால் அதிகளவு பாதிக்கப்பட்டாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாது கட்சிக்காக கடுமையாக உழைத்து கொண்டிருக்கும் இவர் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்து கொண்டு நல்ல திட்டங்களை தந்து கொண்டிருப்பதாக சொல்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

இதுதான் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கும் உண்மையாகும்.பள்ளி கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்தி வருகிறார் செங்கோட்டையன். இன்றைய பள்ளிகல்வித்துறையில் பல முன்னேற்றங்களை கொண்டு வந்தார் செங்கோட்டையன். இது பிடிக்காத கொங்கு மண்டலத்தில் பள்ளி வைத்து இதுநாள் வரை வாரி சுருட்டி வந்த தனியார் மெட்ரிக் பள்ளி அதிபர்கள் ஒன்று திரண்டு செங்கோட்டையனை சந்தித்து பள்ளி கல்வித்துறையில் அரசு பள்ளிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் தாங்கள் வளர்ச்சியடைய முடியாது என்று கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக மனு கொடுத்தனர். அதை அவர்கள் எதிரிலேயே கிழித்து செங்கோட்டையன் குப்பை தொட்டியில் வீசியதாக கூறப்படுகிறது. இதற்கு சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

இத்தனை முதல்வர்கள் தமிழகத்தை ஆண்டனர். ஆனால் கல்வித்துறையில் தனி ஒருவனாய் நின்று புரட்சி செய்து வருகிறார் செங்கோட்டையன் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்தப் பணி தொடர வேண்டும் என்பதே பலரது விருப்பமாக உள்ளது. இன்று கல்வித்துறையில் அவர் செய்த புரட்சியால் பிளஸ் 1 பாடப்பிரிவில் ஏ குரூப்புக்கு மாணவர்கள் சேர ஆர்வம் காட்டவில்லை. மாறாக பி குரூப், சி குரூப்புகளில் சேரவே மாணவ, மாணவிகள் விரும்பி சேரும் நிலை ஏற்பட்டுள்ளது. கல்வித்துறையில் புரட்சி ஏற்படுத்திய செங்கோட்டையன் பணி தொடர வேண்டும். எந்த கல்வித்துறை அமைச்சரும் செய்யாத மாபெரும் புரட்சியை கல்வியில் ஏற்படுத்தியுள்ளார் செங்கோட்டையன், இவருக்கு உறுதுணையாக செயல்பட்டவர் உதயசந்திரன் ஐஏஎஸ் ஆவார்.

இப்படி பல நிகழ்வுகள் கல்வியில் நிகழ்ந்துள்ளது இந்த பொற்காலத்தில்தான். கல்வித்துறையில் புரட்சிகளை ஏற்படுத்தியுள்ள செங்கோட்டையன் ஏன் முதல்வராக பொறுப்பு வகிக்க கூடாது?. ஏன் தமிழகத்தில் புரட்சியை ஏற்படுத்திட கூடாது? என்பதே அனைவரது ஒட்டுமொத்த கேள்வியாக உள்ளது. முதல்வராக அனைத்து தகுதியும், திறமையும், சீனியாரிட்டியும் உள்ள செங்கோட்டையன் பொறுப்பு வகிக்க முன்வர வேண்டும். இந்த மாற்றத்தை பலர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். செங்கோட்டையன் இதுதொடர்பாக எடுக்கும் முடிவை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

Label