OUR CLIENTS
வாஜ்பாய் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை விளக்கம்!
வாஜ்பாய் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை விளக்கம்! Posted on 13-Jun-2018 வாஜ்பாய் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை விளக்கம்!

புது டெல்லி, ஜுன் 13-

உடல் நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

1998 முதல் 2004ஆம் ஆண்டு வரை நாட்டின் பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய்(வயது 93), முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். உடல்நிலை ஒத்துழைக்காததால் பொது வெளியில் எந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை. 

வாஜ்பாயின் உடல்நிலை, நேற்று முன்தினம் மதியம் மோசமடைந்தது. இதனால், அவரை உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு டாக்டர் ரன்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

இந்நிலையில், வாஜ்பாயின் உடல்நிலை சீராக உள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை நேற்று வெளியிட்டுள்ள அறிக் கையில் தெரிவித்துள்ளது. அவர், முழுவதுமாக குணமடையும் வரை மருத்துவமனையிலேயே இருப்பார் எனவும், தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Label