OUR CLIENTS
கொடுத்த வாக்கை நிறைவேற்றாத பிரதமர் மோடி ராகுல் காந்தி கடும் தாக்கு!
கொடுத்த வாக்கை நிறைவேற்றாத பிரதமர் மோடி ராகுல் காந்தி கடும் தாக்கு! Posted on 14-Jun-2018 கொடுத்த வாக்கை நிறைவேற்றாத பிரதமர் மோடி ராகுல் காந்தி கடும் தாக்கு!

மும்பை, ஜுன் 14-

கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இளைஞர்களை பிரதமர் மோடி ஏமாற்றிவிட்டார் என ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். 

மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அவர் பேசியதாவது:& கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால், தற்போது அவர் கொடுத்த வாக்குறுதியை நிறை வேற்றாமல் இளைஞர்களை ஏமாற்றிவிட்டார்.

சீனா, ஒவ்வொறு 24 மணி நேரத்திற்கும் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறது. ஆனால், இந்தியாவோ வெறும் 450 இளைஞர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பினை வழங்குகிறது. கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக பா.ஜ.க அமைச்சர் ஒருவரே தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க  தலைமையிலான அரசு, 10 முதல் 15 பணக்கார நபர்கள் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடனான ரூ.2.5 லட்சம் கோடியை வாராக்கடனாக தள்ளுபடி செய்துள்ளது. அதே நேரத்தில், விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக கேட்கும் விவசாயக் கடன் தள்ளுபடியை இந்த அரசு புறக்கணித்துள்ளது. நமது நாட்டின் விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை இந்த அரசு செய்தால் போதும், அவர்கள் சீனாவுடன் போட்டி போடுவார்கள். இவ்வாறு ராகுல் பேசினார்.

Label