OUR CLIENTS
நீடித்த ஆயுள் தரும் தண்ணீர் ஆசனம்
நீடித்த ஆயுள் தரும் தண்ணீர் ஆசனம் Posted on 14-Jun-2018 நீடித்த ஆயுள் தரும் தண்ணீர் ஆசனம்

யோகா சனத்தில் புத்துணர்வூட்டும் புதிய பிரிவாக பிறந்திருக்கிறது, ‘அக்வா’ ஆசனம் எனப்படும் நீரடி ஆசனம். வழக்கமாக தரையில் ஒரு விரிப்பில் அமர்ந்து செய்யப்படும் யோகாசனமே இப்படி தண்ணீருக்கடியிலும் செய்யப்படுகிறது.

 நாட்டின் உயர்தர நலவாழ்வு மையங்களிலும், ரிசார்ட் களிலும் இந்த ஆசனத்தில் மக்கள் ஆர்வத்தோடு ஈடுபடத் தொடங்கியிருக்கிறார்கள். தண்ணீருக்குள் நின்றபடி உடலின் மேற்பகுதி தண்ணீருக்கு வெளியே இருக்கும்படியும், சில வேளைகளில் முழுமையாக தண்ணீருக்குள் மூழ்கி மூச்சடக்கியும் இந்த தண்ணீர் ஆசனம் மேற்கொள்ளப்படுகிறது. தண்ணீரின் மீது மிதக்கும் பலகையிலும் ஆசனம் செய்கிறார்கள்.

கடல் நீர் நிரப்பிய நீச்சல்குளங்கள், வெந்நீர் நிரப்பிய குளியல் தொட்டிக்குள் இந்த தண்ணீர் ஆசனங்களைச் செய்கின்றனர். இதை முடித்து வெளியே வரும்போது, உடல், மனம், உணர்வு எல்லாமே புத்துணர்ச்சி பெறுவதாகக் கூறுகிறார்கள். வழக்கமாக தரையில் ஒரு விரிப்பில் அமர்ந்து செய்யப்படும் யோகாசனமே இப்படி தண்ணீருக்கடியிலும் செய்யப்படுகிறது.

முன்னணி நலவாழ்வு மையம் ஒன்றின் நிறுவனர் நிகில் கபூர், இந்த யோகாசனத்தை மிக எளிமையாக செய்துவிடலாம் என்கிறார்.
தண்ணீர் யோகாசனமானது வலு, நிலைத்தன்மை, சமச்சீர், பல்வேறு அசைவுகள் என்று உடலின் அடிப்படைப் பணிகளை மேம்படுத்த உதவுகிறது. இந்த யோகாசனம் தற்போது பிரபலமாகிவருகிறது. யோகாசனத்தில் நன்கு தேர்ச்சி பெற்ற வர்களும், புதிதாக அதில் ஈடுபடுபவர்களும் தண்ணீர் ஆசனத்தை மேற்கொள்ளலாம். இதில் ஈடுபடுபவர்கள், தண்ணீரின் நலமளிக்கும் தன்மையை அனுபவப்பூர்வமாக உணரலாம். வழக்கமாக தரையில் மேற்கொள்ளும் ஆசனத்தைவிட இதில் எடை குறைவாக உணரலாம். உடம்பின் சமச்சீர் நிலையை மேம்படுத்த இது கைகொடுக்கிறது. தண்ணீரின் அழுத்தமானது நுரையீரல்களை விரிவாக்க உதவுகிறது. அதனால் நாம் அதிகமான ஆக்சிஜனை உள்ளிழுக்க முடிகிறது’’ என்று கூறு கிறார்.

தண்ணீருக்குள் சூரிய நமஸ்காரம், விருக்‌ஷா சனம், அர்த்த சக்கராசனம், தனுராசனம் ஆகியவை பெரும்பாலும் செய்யப்படுகிறது. சூரிய நமஸ்காரமானது ஒட்டுமொத்த உடம்பின் வலுவையும் ஒழுங்கையும் கூட்டுகிறது. விருக்‌ஷாசனம் நிலைத்தன்மையையும், நெகிழ்வுத்தன்மையையும், அர்த்த சக்ராசனமானது முதுகெலும்பு மற்றும் பின்பகுதித் தசை களுக்கு நெகிழ்வுத்தன்மையையும், தனுராசனம் உடம்பின் மேற்பகுதியை வளைத்து, தோள்பட்டைகளை வலுப்படுத்தவும், முதுகெலும்பு நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும் உதவுகிறது என்கிறார்கள். வீரபத்ராசனமும் தண்ணீருக்குள் அதிகம் மேற்கொள்ளப்படுகிறது.
வெளிநாட்டைச் சேர்ந்த யோகாசன ஆர்வலரான பார்பரா ஹாஸ், தண்ணீர் ஆசனத்தைக் கற்றுக்கொள்வதற்காகவே இந்தியாவுக்குப் பறந்து வந்திருக்கிறார். இது உடல் ரீதியாக கொஞ்சம் சவாலான ஆசன முறை என்பது அவரது கருத்து.

‘‘இதில், சுவாசம் மற்றும் உடல் வலுவால் நமது சமநிலையைப் பராமரிப்பதுடன், தண்ணீர் இயக்கத்தையும் கட்டுப் படுத்த வேண்டும். ஆரம்பத்தில் எனக்கு வேடிக்கையாகத் தோன்றிய இது, போகப் போக சவாலாக மாறியது. ஆனால் இதைச் செய்துமுடிக்கும்போது, வெற்றிகரமான, மனமார்ந்த பயிற்சியாகத் தோன்றுகிறது. தரையில் செய்வதைவிட தண்ணீருக்குள் ஆசனம் செய்யும்போது கடினமாகத் தோன்றினாலும், முழு உடம்புக்கும் நல்ல பயிற்சி ஆகிறது.

Label