OUR CLIENTS
டெல்லியில் அபாயகர நிலையை எட்டிய காற்று மாசு
டெல்லியில் அபாயகர நிலையை எட்டிய காற்று மாசு Posted on 15-Jun-2018 டெல்லியில் அபாயகர நிலையை எட்டிய காற்று மாசு

புதுடெல்லி, ஜூன் 15-

அண்டை மாநிலங்களில் வீசும் புழுதிப் புயல் காரணமாக டெல்லியில் காற்று மாசு மீண்டும் அபாயகர நிலையை எட்டியது.

பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களில் அவ்வப்போது புழுதிப் புயல் வீசுகிறது. இதன் காரணமாக ஏற்கெனவே காற்று மாசுவால் கடும் விளைவுகளை சந்திக்கும் டெல்லியில், தற்போது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 8 மடங்கு மாசு அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்னும் சில நாட்களுக்கு மாசு நீடிக்கும் என்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு கண் மற்றும் தொண்டை எரிச்சல் ஏற்பட்டுள்ளது.

Label