Logo

அமைச்சர் வேலுமணியின் சவாலை ஏற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்- மாநிலச் செய்தகள் தொகுப்பு

அமைச்சர் வேலுமணியின் சவாலை ஏற்ற திமுக தலைவர் மு..ஸ்டாலின்

கோவைஜன.4-

உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியின் சவாலை திமுக தலைவர்  மு.ஸ்டாலின் ஏற்றார்அமைச்சர் எஸ்.பிவேலுமணியின் ஊழலை நீருபிக்க நான் ரெடி என்று மு.ஸ்டாலின் அறிவித்துள்ளார்

கோவை வடக்கு மாவட்டம் தொண்டாமுத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட தேவராயபுரம் ஊராட்சியில் நேற்று  முன்தினம் மக்கள் கிராம சபைக் கூட்டத்தைத் துவக்கி வைத்து திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:

தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவிற்கு இந்த கோவையில் மட்டும் மிகப்பெரிய அளவில் அக்கிரமங்கள் நடந்து கொண்டு இருக்கிறதுஅதற்கு யார் காரணம் என்று உங்களுக்குத் தெரியும். (ஊழல் மணி.. ஊழல் மணி.. என்று மக்கள் ஆர்ப்பரித்தனர்.)

வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராகப் பதவி வைத்துக்கொண்டிருக்கிறார்நான் வகித்த பதவி தான்நான் துணை முதலமைச்சராக இருந்தாலும் உள்ளாட்சித்துறை அமைச்சர் பொறுப்பையும் என் கையில் வைத்திருந்தேன். “உள்ளாட்சியில் நல்லாட்சி செய்தவன் என்று பெயர் எடுத்தவன்இந்த அடியேன் ஸ்டாலின்ஆனால் இப்போது உள்ளாட்சித்துறை என்று சொல்வதற்கு வெட்கப்படுகிறேன்அந்தளவுக்கு அந்தத் துறையை அசிங்கப்படுத் தியிருக்கிறார்கள்கேவலப்படுத்தி யிருக்கிறார்கள்அவரை உள்ளாட்சித் துறை அமைச்சர் என்று சொல்வதற்குப் பதிலாக ஊழலாட்சித் துறை அமைச்சர் என்றுதான் சொலகுறிப்பாக எல்லா மாவட்டங்களையும் விடஅதிகமாக அக்கிரமம்அநியாயம்ஊழல் இந்தக் கோவை மாவட்டத்தில்தான் நடந்து கொண்டிருக்கிறது.

கவலைப்படாதீர்கள்இன்னும் நான்கு மாதங்கள் தான்அவர்கள் ‘சாப்டர் கிளோஸ் நாம் மக்கள் கிராம சபைக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்இதற்குப் போட்டியாக நாளைக்கு ஆளும்கட்சி சார்பில் ஒரு கூட்டம் நடக்கப் போகிறதுஅந்தக் கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வரவிருக்கிறார்வழியெங்கும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ள என்னை வரவேற்க பலூன்கள் கட்டப்பட்டுள்ளனபலூன்களைப் பார்த்ததும் அவரது ஞாபகம் வந்துவிட்டதுஅவற்றை விரைவில் அப்புறப்படுத்திவிடுமாறு நம்முடைய தோழர்களுக்கு நான் அறிவுறுத்தியிருக்கிறேன்அவர் பலூன்களை உடைப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

போட்டிக் கூட்டம் நடத்துங்கள்ஆனால்நான் கேட்கிற கேள்விக்குப் பதில் சொல்வதை விடமக்களாகிய நீங்கள் கேட்கின்ற கேள்விகளுக்குப் பதில் கூறக்கூடிய தெளிவு - துணிவு - தெம்பு - ஆற்றல்-அருகதை அவர்களுக்கு இருக்கிறதாஇன்றைக்கு ஊழலிலேயே கடைந்தெடுத்த ஊழல் ஆட்சி செய்திருப்பவர் அமைச்சர் வேலுமணிஅவர் செய்திருக்கக்கூடிய ஊழல் வேறு ஒன்றும் இல்லைமஞ்சள் நிறத் தெருவிளக்குகளை எல்..டிவிளக்குகளாக மாற்றப் போகிறோம் என்று ஒரு திட்டத்தை அறிவித்துமூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த மாவட்டத்தில் மட்டுமல்லதமிழ்நாடு முழுதும் இருக்கக்கூடிய 38 மாவட்டங்களிலும் அந்த விளக்குகளை மாற்றவேண்டும் என்று சொல்லிகோடி கோடியாகக் கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்பொத்தாம் பொதுவாக பேச விரும்பவில்லை ஆதாரத்தோடு சொல்கிறேன்.

நாமெல்லாம் கடைக்குச் சென்று அந்த விளக்குகளை வாங்கினால் அந்த விளக்கின் விலை 450 ரூபாய் தான்ஆனால் வேலுமணி என்ன விலைக்கு வாங்குகிறார் தெரியுமா? 3737 ரூபாய்க்கு வாங்குகிறார்இது முதல் ஆண்டுஅடுத்தடுத்த ஆண்டுகளில் 4120 ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார்இதேபோல எல்..டி.யில் இன்னொரு வகை உள்ளதுஅதனை நாம் கடையில் வாங்கினால் 1550 ரூபாய்அதை என்ன விலைக்குக் கணக்குக் காட்டுகிறார்? 14,919 ரூபாய் கணக்கு காட்டுகிறார்கள்.

இதை எல்லாம் ஆளுநர் இடத்தில் நாங்கள் சென்று சில நாட்களுக்கு முன்னால்எடப்பாடியிலிருந்து நம்முடைய துணை முதலமைச்சர் .பன்னீர்செல்வத்திலிருந்து வேலுமணிதங்கமணிஜெயக்குமார்விஜயபாஸ்கர் என அமைச்சர்கள் மீது பட்டியல் போட்டு - சும்மா பொத்தாம் பொதுவாக இல்லைஆதாரத்தோடு புள்ளிவிவரத்தோடு கொடுத்து இருக்கிறோம்இதையெல்லாம் ஏற்கனவே நாங்கள் முறையாக புகார் கொடுத்து அந்தப் புகார் அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு அதெல்லாம் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவாகி நடந்துகொண்டிருக்கிறது.

இதன்படி முதலமைச்சர் மீது காண்ட்ராக்ட் ஊழல்காண்ட்ராக்ட் ஊழல் என்றால் அவருடைய சம்பந்திசம்பந்திக்கு சம்பந்தி அவர்களுக்கெல்லாம் காண்ட்ராக்ட் விட்டுக் கிட்டத்தட்ட 6000 கோடி மதிப்புள்ள வகையில் ஊழல் நெடுஞ்சாலைத் துறைபொதுப்பணித்துறையில் நடந்துள்ளதுஇதனை ஆதாரங்களோடு நீதிமன்றத்தில் நம்முடைய அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., அவர்கள்கட்சி சார்பில் வழக்குப் போட்டு சென்னை உயர்நீதிமன்றம் இதனை சி.பி.விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு போட்டது.

உடனே எடப்பாடி என்ன செய்தார் என்றால் டெல்லிக்குச் சென்று உச்சநீதிமன்றத்தை நாடிசி.பி.விசாரிக்கத் தடை உத்தரவைப் பெற்றார்நான்கு மாதங்களில் தமிழ்நாட்டில் தி.மு.ஆட்சிக்கு வந்தவுடன்நாங்கள் சும்மா விட்டுவிடுவோமா?

ஊழல் புகார்களை எல்லாம் நிரூபிக்க முடியவில்லை என்றால் ஸ்டாலின் அரசியலிலிருந்து ஒதுங்கிவிடுவாரா என்று அமைச்சர் வேலுமணி கேட்டிருக்கிறார்அமைச்சர் வேலுமணி அவர்களே அதை நிரூபிக்க நான் ரெடி நீங்க ரெடியாநீங்கள் முதலில் சொல்லுங்கள்நான் நிரூபிக்கவில்லை என்றால் நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக் கொள்கிறேன்நான் நிரூபித்துவிட்டால் நீங்கள் அரசியலைவிட்டு ஒதுங்குங்கள்அது ஒரு பக்கம்அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டு இதிலிருந்து தப்பித்துவிடலாம் என்று நினைக்காதீர்கள்.

இவ்வாறுதிமுக தலைவர் மு.ஸ்டாலின் தனது உரையில் தெரிவித்தார்.

==============================================================================

பொங்கல் பரிசுத் தொகுப்பில் 100 கிராம் ஆவின் நெய்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவிப்பு

பழனிஜன.4-

பொங்கல் பரிசுத் தொகுப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆவின் நெய்யும் சேர்த்து வழங்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பழனியில் சாமி தரிசனம் செய்ய வந்தபோது கூறினார்.

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று பழனி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டதுசுவாமி தரிசனம் செய்த பிறகு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது : பால்வளத் துறையில் கொள்முதல் செய்த பாலுக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்படும்.  வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு வழங்கும் பரிசுப்பொருட்கள் தொகுப்பில் ஒவ்வொரு குடும்ப அட்டை தாரர்களுக்கும் 100 மில்லி ஆவின் நெய்யும் வழங்கப்படும் என்று பாலவளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிவித்துள்ளார்மேலும் அவர் கூறுகையில் அதிமுக கூட்டணியில் இடம்பெறக்கூடிய கட்சிகள் எடப்பாடி பழனிச்சாமியை ஏற்றுக்கொண்டாதான் அங்கம் வகிக்க முடியும்.

 பழனி முருகன் நவபாஷாண சிலையை செய்த சித்தர் போகரை 5200 ஆண்டுகள் ஆனபிறகும் மறக்காமல் வழிபடுவது போலஏழை எளிய மக்களுக்காகவே வாழ்ந்த தலைவர் எம்ஜிஆரை மறக்காமல் அரசியலுக்கு வரும் அனைவரும் எம்ஜிஆர் ஆட்சி அமைப்போம் என்றுதான் சொல்வார்களே தவிர கருணாநிதி ஆட்சி அமைக்கிறோம் என்று சொல்லமாட்டார்கள்.

மேலும் நடிகர் ரஜினிகாந்த் போல வெளிப்படைத்தன்மை உள்ள நல்ல மனிதர் யாரும் இல்லைஅவரது உடல்நிலை மற்றும் குடும்பச் சூழலை கருத்தில் கொண்டு அவர் அரசியலில் இருந்து விலகுவதாக எடுத்த முடிவை மனதார ஏற்கிறேன்ரஜினிகாந்த் சகல சௌபாக்கியங்களும் பெற்று நீண்டநாள் வாழ வேண்டும்அவர் அரசியிலுக்கு வராவிட்டாலும் ஆன்மீக வழியில் நடக்கும் ரஜினிகாந்தின் ரசிகர்கள் யாரும் ஆன்மீகத்தை விமர்சனம் செய்துகேலியும் கிண்டலும் செய்யும் திமுகவிற்கு எக்காலத்திலும் வாக்களிக்க மாட்டார்கள்.

தெருக் குழாயடியில் பெண்களுக்கு உள்ளே வரும் சண்டையில் நல்ல குடும்பத்து பெண் மீது தவறான நடவடிக்கை உள்ள பெண் தவறாக குற்றம்சாட்டி பேசுவது எப்படியோ அதுபோல இருப்பதை எல்லாம் சுருட்டிய திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுகவை பற்றி குற்றம்சாட்டி ஆளுநரிடம் மனு அளித்துள்ளார்திமுகவிற்கு தமிழக மக்கள் சம்மட்டி அடி கொடுப்பார்கள்இனி திமுக ஆட்சி வரவே வராது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையாக விமர்சனம் செய்தார்.

==============================================================================

திருவள்ளுவர்...- அவ்வையார்..

பாவம் ரொம்ப கன்பியூஸ் ஆகிட்டார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்!

திண்டுக்கல்ஜன.4-

அதிமுக கட்சி கூட்டத்தில் திருக்குறளை ஒப்புவித்து எழுதியது அவ்வையார் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது மீண்டும் சர்ச்சையாகி உள்ளதுஅத்துடன் என்னது வள்ளுவர் அதை எழுதினாராஎன மேடையிலேயே சீனிவாசன் கேட்டது அனைவரையும் அதிர்ச்சி அடையவும் வைத்தது.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் எதையாவது பேசி சர்ச்சையை உருவாக்கி விடுகிறார்அண்மையில் இயேசுவை சுட்டுக் கொன்ற கோட்சேவின் வாரிசுகளாஎன சீனிவாசன் பேசியது பெரும் சர்ச்சையானதுஇந்த சர்ச்சையே ஓயாத நிலையில் திருக்குறளை எழுதியது அவ்வையார் என பேசியுள்ளார் சீனிவாசன்.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் வடக்குப் பகுதி அதிமுக ஆலோசனை கூட்டம் திருமண மண்டபத்தில் நடைபெற்றதுஇந்த கூட்டத்தில் சீனிவாசன் பேசுகையில்அருமையாக மழை பெய்கிறதுபெயருக்கு ஏற்றார் போல மும்மாரி மழை பெய்து நிலத்தடி நீர் பெருகுகிறதுஎல்லாம் நன்றாக சிறப்பாக உள்ளதுநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்று அந்த காலத்தில் அவ்வையார் பாடினார்.

அந்த காலத்தில் அரசனை நம்பி அந்த அம்மா பாடினார்கள் .. என பேசிக் கொண்டிருந்தார்அப்போது மேடையில் இருந்தவர் எழுந்துநீங்க சொன்ன குறளை எழுதியது திருவள்ளுவர் என்றார்உடனே அதிர்ச்சி அடைந்தவரான சீனிவாசன்என்னது வள்ளுவர் சொன்னாராசரி அவ்வையாரும் சொன்னார்.. திருத்திக் கொள்ளலாம்..

வள்ளுவர் சொல்லியிருக்கிறார்ரெண்டு பேரும் சொல்லியிருக்கிறாங்க.. அதனால தப்பு இல்லை.. அவ்வையாரும் சொல்லியிருக்காங்கவரப்புயர நீர் உயரும் என அவ்வையாரும் சொல்றாங்கநாம என்ன எழுதி வெச்சிகிட்டா பேசுகிறோம்.. கருத்துகளைத்தானே சொல்றோம்.. விஷயம் ஒன்னுதானே.. நல்ல மனசு இருந்தா மழை பெய்யும் என கூறி சமாளித்தார் சீனிவாசன் என்று சர்ச்சை செய்திகளாக பரவிவருகிறது.

ஆனால் உண்மையில் அமைச்சர் சீனிவாசன் சொன்னது சரியேகூட இருந்தவர்கள் அவரை கன்பியூஸ் பன்னிவிட்டனர்இதனால் மேடையில் தடுமாறி சர்ச்சையில் சிக்கியுள்ளார்வடிவேல் காமடி போன்று ஆகிவிட்டது, “அய்யோ பாவம் அவரே கன்பியூஸ் ஆகிவிட்டார்.

உண்மை யாதெனில்இது ஔவையார் இயற்றிய மூதுரை என்கின்ற தமிழ் நீதி நூலில் இடம் பெற்ற வரிகள்... (இந்த நூலுக்கு வாக்குண்டாம் என்ற இன்னொரு பெயரும் உண்டு).

நெல்லுக்(குஇறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் தொல்லுலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்(டு)

எல்லார்க்கும் பெய்யும் மழை. (10 மூதுரை)

பொருளுரை: நெற்பயிருக்கு இறைக்கப்பட்ட தண்ணீர் வாய்க்கால் வழியாகச் சென்று அருகாமையிலுள்ள புற்களுக்கும் கசிந்து பசுமையைத் தரும்.

அதுபோலநீடித்த இவ்வுலகத்தில் நல்லவர் ஒருவர் இருப்பாராயின் அவரது நற்குணத்திற்காகப் பெய்யும் மழைஉலகத்தில் உள்ளோர் அனைவருக்கும் பெய்து நன்மை பயக்கும்.

கருத்து:  நூற்றுக்கு ஒருவன் நல்லவனாக இருந்தால் கூட அவனைச் சேர்ந்த எல்லோரும் பயனடைவர்.

 திருக்குளிலும் இந்த வரிகள் உண்டுஆக அமைச்சர் கூறியதும்கன்பியூஸ் ஆகி விளக்கம் அளித்ததும் சரியே... 

==============================================================================

அர்ச்சனை தட்டில் மனுக்கள் வைத்து நூதன போராட்டம்

குமரிஜன.4-

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் நூதன முறையில் கோயில் குறைகள் அடங்கிய மனுக்களுடன் அர்ச்சனை தட்டு கொடுக்க முயன்றபோது அறநிலையத் துறையினர் வாங்க மறுத்ததால் கோவிலில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

பெண்களின் சபரிமலை என வர்ணிக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் வளாகத்தில் துப்புரவு பணி செய்யாததால் கோயில் வளாகம் அசுத்தம் அடைந்துள்ளதாகவும் இங்கு அர்ச்சனை கொண்டு வரப்படும் பொருட்களை கோயில் ஊழியர்கள் மீண்டும் கடைகளில் விற்று அவற்றை மீண்டும் மீண்டும் பக்தர்கள் கோயிலுக்கு கொண்டு வருவதாகவும் பக்தர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

மேலும்இங்கு பன்னீர் அபிஷேகம் நடைபெறாத நிலையில் பக்தர்களுக்கு பன்னீரை விற்பனை செய்துவிட்டு கோயிலுக்குள் கொண்டாடப்படும் தண்ணீர் மீண்டும் கடைகளுக்குச் சென்று அங்கிருந்து மீண்டும் மீண்டும் பக்தர்கள் வாங்கி கோயிலுக்கு கொண்டு செல்வதாகவும் இவ்வாறான பல மோசடி செயல்களில் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாகவும் பக்தர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில்இந்துக் கோயில் கூட்டமைப்பினர் பலமுறை கோயில் பிரச்சினைகள் தொடர்பாக அறநிலையத் துறைக்கு மனு கொடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் நேற்று அர்ச்சனை தட்டில் மனுக்களை வைத்து கோயிலில் அளிக்க சென்றனர்.

ஆனால் அதை கோயிலில் பெற்றுக் கொள்ளாததால் கோயில் வாசலில் அமர்ந்து திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்மனுவில் அம்மனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு சுமூகமான சூழலை ஏற்படுத்தி தராத நிர்வாகத்தினர் மீது பகவதி அம்மன் தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் எனவும் கோயில் வளாகத்தில் முறைகேடு செய்பவர்கள் மீதும் பகவதிஅம்மன் தகுந்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இப்போராட்டத்தில் பேச்சுவார்த்தைக்காக அறநிலையத்துறை அதிகாரிகள் வராததால் போராட்டம் நடைபெற்றதுஇரண்டு மணி நேரத்துக்குப் பிறகு அதிகாரிகள் வந்து போராட்டக்குழுவினர் கூறிய குறைகளை நிவர்த்தி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இப்போராட்டம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில்தொடர்ந்து மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் வளாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று அறநிலையத்துறை நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை எனவும் தங்களுக்கு அறநிலையத்துறை உரிய பதில் தரவில்லை என்றால் கோயிலுக்குள்ளேயே தொடர்ந்து பஜனை பாடியபடி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர்அதிகாரிகள் உறுதி அளித்தபடி துரிதமாக நடவடிக்கை எடுக்கவில்லை எனில் ஒரு வாரத்தில் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் கூறினர்.

==============================================================================

காங்கிரஸில் புதிய நியமனங்களால் பல்வேறு சர்ச்சைகள் மோதல்!

சென்னைஜன.4-

தமிழக காங்கிரஸ் கட்சி புதிய நியமனங்களால் பல்வேறு சர்ச்சைகள் வெடித்துள்ளது.

தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கு 32 துணை தலைவர்கள், 57 பொது செயலாளர்கள், 104 செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்இந்த நியமனங்கள் தமிழக காங்கிரஸில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இப்புதிய நியமனங்கள் தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சமூக வலைதளங்களில் பகிரங்கமாக அதிருப்தி கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்இதற்கு சில காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் பதிலடியும் தந்து வருகின்றனர்இந்த நியமனம் தொடர்பாக லோக்சபா எம்.பிகார்த்தி சிதம்பரம் தமது ட்விட்டர் பதிவில்இவ்வளவு பெரிய கமிட்டியால் எந்த பயனுமில்லை. 32 துணை தலைவர்கள், 57 பொது செயலாளர்கள், 104 செயலாளர்கள் என நியமிக்கப்பட்ட யாருக்கும் எந்த அதிகாரமும் இருக்காதுஅதிகாரம் இல்லாததால் யாருக்கும் பொறுப்பு என்பது இருக்காது என பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதில் தந்துள்ள காங்.,மூத்த தலைவர் கோபண்ணாசிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியில் 12 துணை தலைவர்கள், 16 பொதுச்செயலாளர்கள், 30 செயலாளர்கள், 25 இணை செயலாளர்கள் என நியமனம் செய்யப்பட்டிருக்கிறபோதுதமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் எண்ணிக்கை குறித்து பேசுவதற்கு என்ன உரிமை இருக்கிறதுஊருக்கு உபதேசம்தமக்கில்லையோஎன பகிரங்கமாக மோதியுள்ளார்.

==============================================================================

அம்மா மினி கிளினிக் திட்டம் அரசு எவ்வாறு செயல்படுத்தும்?

மு.க.ஸ்டாலின் கேள்வி கணைகள்

ஈரோடுஜன.4-

ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே போதுமான மருத்துவர்கள்செவிலியர்கள்மருத்துவ உபகரணங்கள் இல்லாத நிலையில்மினி கிளினிக் திட்டத்தை அரசு எவ்வாறு செயல்படுத்தும் என திமுக தலைவர் மு..ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அடுத்த குமாரவலசு பகுதியில்திமுக சார்பில் நடைபெற்ற மக்கள் கிராம சபை கூட்டத்தில் மு..ஸ்டாலின் பங்கேற்றுமக்களுடன் கலந்துரையாடினார்அதிமுக அரசை கடுமையாக விமர்சித்த அவர்சட்டமன்றத்தில் தன்னை பார்த்து சிரித்த காரணத்திற்காக .பன்னீர் செல்வம் பதவி நீக்கப்பட்டதாக கூறினார்.

ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே போதுமான மருத்துவர்கள்செவிலியர்கள்மருத்துவ உபகரணங்கள் இல்லாத நிலையில்மினி கிளினிக் திட்டத்தை அரசு எவ்வாறு செயல்படுத்தும் என அவர் கேள்வி எழுப்பினார்கூட்டத்தில் பங்கேற்ற கார்த்திகா என்ற பெண்ஊரடங்கு காலத்தில் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் கீழ்தனக்கு திமுகவினர் மருத்துவ உதவிகள் செய்ததாக கூறிகண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இங்கு கூட்டத்தை முடித்துக் கொண்டுகரூர் மாவட்டத்திற்கு சென்ற திமுக தலைவர் மு..ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்குதிறந்த வேனில் நின்றபடி பேசிய அவர்திமுக கூட்டணிக்கு 200 தொகுதிக்கும் மேல் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என்றார்.

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).

Get Newsletter

Advertisement