Logo

உத்தேச பட்டியலை தயார் செய்த பாஜக..!

சட்டசபை தேர்தல் 2021-உத்தேச பட்டியலை தயார் செய்த பாஜக..!

சென்னை :

தமிழகத்தில் 38 தொகுதிகள் பாஜகவுக்கு சாதகமாக இருப்பதாக கூறி அந்த தொகுதிகளின் பட்டியலை டெல்லி தலைமைக்கு அனுப்பி வைத்திருக்கிறது தமிழக பாஜக தலைமை. மேலும், 38 தொகுதிகளுக்கான உத்தேச வேட்பாளர்கள் பட்டியலையும் உடன் இணைத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 38 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக தேசியத் தலைமை விரைவில் அதிமுக தலைமைக்கு கொடுக்கும் எனத் தெரிகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு சாதகமான, வாக்குவங்கி உள்ள தொகுதிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம், திருப்பூர் வடக்கு, மேட்டுப்பாளையம், கோவை தெற்கு, மயிலாப்பூர், புவனகிரி, நாகர்கோவில் என அந்த பட்டியலில் 38 தொகுதிகள் இடம்பெற்றிருக்கின்றன. இதில் சென்னையில் 6 தொகுதிகளும் பிற மாவட்டங்களில் 32 தொகுதிகளும் அடக்கம்.

 தமிழக பாஜக தரப்பில் தயாரிக்கப்பட்ட இந்த பட்டியல் அக்கட்சியின் தேசிய தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது விரைவில் பாஜக தமிழக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி மூலம் அதிமுக தலைமைக்கு கொடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து இந்த 38 தொகுதிகளில் பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்து அதிமுக தலைமை முடிவு செய்யும்.  தொகுதிகள் மட்டுமல்லாமல் உத்தேச வேட்பாளர்கள் பட்டியலையும் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தயார் செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் மட்டுமே முழுமையாக உள்ளதால் இந்தப் பணிகளை இப்போதே முடித்துவிட்டது தமிழக பாஜக தலைமை.

தமிழக பாஜக தரப்பில் 38 தொகுதிகளை எதிர்பார்க்கும் நிலையில் அதிமுகவோ 15 சீட்களுக்கு மேல் கொடுக்க விரும்பவில்லை எனத் தெரிகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பியூஷ் கோயலிடம் தமிழக பாஜகவின் வாக்குவங்கி மற்றும் செயல்பாடு குறித்து அதிமுக தரப்பில் புட்டு புட்டு வைக்கப்பட்டது. இதற்கு பிறகு தான் யதார்த்தத்தை உணர்ந்து 5 தொகுதிகளுக்கு ஒ.கே. சொன்னார் பியூஷ் கோயல்.

இதேபோல் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் இதேபோன்ற ஒரு புள்ளி விவரங்களை பாஜக தேசியத் தலைமையிடம் விளக்கி கூறும் திட்டத்தில் இருக்கிறது அதிமுக தலைமை. ஆனால் எந்த புள்ளி விவரத்தை வேண்டுமானாலும் கூறிக்கொள்ளுங்கள், 25 தொகுதிகளுக்கு குறைந்து போட்டியிடுவதில்லை என்பதில் தீர்க்கமாக இருக்கிறது பாஜக தமிழக தலைமை.

இந்த நிலையில் பாஜக வரக்கூடிய தமிழக சட்டமன்றத் தேர்தலில் 40 முதல் 50 தொகுதிகளில் போட்டியிட முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறதுஅதன் ஒரு பகுதியாக 38 தொகுதிகளுக்கான வேட்பாளர் மற்றும் தொகுதிகளின் பெயர் அடங்கிய பட்டியல்தற்போது கசிய தொடங்கியிருக்கிறது.

தொகுதி மற்றும் அவற்றில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயரோடு ஒரு பட்டியல் உலாவருகிறது.

அதன் விவரம்,

1.திருவல்லிக்கேணி - குஷ்பு

2.தியாகராய நகர் - எச்.ராஜா

3.கொளத்தூர் - ஏஎன்எஸ்.பிரசாத்

4.மயிலாப்பூர் - கரு.நாகராஜன்

5.துறைமுகம் - வினோஜ் செல்வம்

6.வேளச்சேரி - டால்பின் தரணி

7.மாதவரம் - சென்னைசிவா

8.திருவள்ளூர் - லோகநாதன்

9.செங்கல்பட்டு - கேடி.ராகவன்

10.கேவி குப்பம்கார்த்தியாயினி

11.பெண்ணாகரம் - வித்யாராணி

12.திருவண்ணாமலைதணிகைவேல்

13.போளூர் - சி.ஏழுமலை

14.ஓசூர் - நரசிம்மன்

15.சேலம் மேற்கு - சுரேஷ்பாபு

16.மொடக்குறிச்சி - சிவசுப்பிரமணியம்

17.ராசிபுரம் - விபி.துரைசாமி

18.திருப்பூர் வடக்குமலர்க்கொடி

19.கோவை தெற்கு - வானதி சீனிவாசன்

20.சூலூர் - ஜிகே.நாகராஜ்

21.திருச்சி கிழக்கு - டாக்டர் சிவசுப்பிரமணியம்

22.பழனி - என்.கனகராஜ்

23.அரவக்குறிச்சி - அண்ணாமலை

24.ஜெயங்கொண்டம் - அய்யப்பன்

25.திட்டக்குடி - தடா பெரியசாமி

26.பூம்புகார் - அகோரம்

27.மைலம் - கலிவரதன்

28.புவனகிரி - இளஞ்செழியன்

29.திருவையாறு - பூண்டி வெங்கடேசன்

30.தஞ்சாவூர் - கருப்பு முருகானந்தம்

31.கந்தர்வக்கோட்டை - புரட்சிக்கவிதாசன்

32.சிவகங்கை - சத்தியானந்தன்

33.பரமக்குடி - பொன்.பாலகணபதி

34.மதுரை கிழக்கு - ராமசீனிவாசன்

35.நெல்லை - நயினார் நாகேந்திரன்

36.சாத்தூர் - மோகன்ராஜுலு

37.தூத்துக்குடி - சசிகலா புஷ்பா

38.நாகர்கோயில் - காந்தி

மேலும் கூட்டணி கட்சியான பாமகவை தாமரை சின்னத்தில் போட்டியிட கூறி வருகின்றனராம்ஆனால் பாமக தனி சின்னத்தில் போட்டியிடவும், 25 முதல் 30 தொகுதிகள் வரை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

மேலும் பாஜகஅதிமுகவிற்கு நெருக்கடி கொடுத்தே அதிக தொகுதியை கேட்டு வருவதாக அதிமுகவினர் ஆங்காங்கே முணுமுணுக்கின்றனர்எதுஎப்படியானாலும் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது.

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி கே பழனிச்சாமியை தமிழக பாஜக அங்கீகரிக்காததுகூட்டணிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறதுஆனாலும் கூட்டணி கட்சிகளின் கூட்டம் பெயரளவுக்கு நடத்தப்படும்அதில் எடப்பாடி கே பழனிச்சாமியே தேர்வு செய்யப்படுவார் என்று பாஜக நிர்வாகிகள் ரகசியமாக கூறுகின்றனர்இந்த நிலையில் பாஜக தேர்வுசெய்யும் வேட்பாளர்களில் பெரும்பான்மையானோர் பிரபலங்கள் ஆகவே தேர்வு செய்ய இருப்பதாகவும் கூறப்பட்டது.

பாஜக கட்சிக்கு ஆட்களை சேர்ப்பதில் தீவிர ஆர்வம் காட்டி வந்ததையும் பார்க்க முடிந்ததுதிரைத்துறையினர்மாற்றுக் கட்சியினர் என்று கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை கட்சிக்கு ஆட்களை சேர்த்துதேர்தலுக்காக கட்சியை பலப்படுத்தியது பாஜகஇதை வரைகடந்த கால நிகழ்வு மூலம் பார்க்க முடிகிறது.

இந்தநிலையில் அடுத்த வாரம் துக்ளக் விழாவிற்காக  அமித் ஷா சென்னை வரவுள்ளார்அன்று கூட்டணி பற்றிய அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டும் என்று கூறப்படுகிறதுஇதனால் தமிழக அரசியல் தேர்தல் களம் அமித் ஷா வருக்கைக்காக காத்திருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது..

 

 

Leave A Comment

Don’t worry ! Your email address will not be published. Required fields are marked (*).

Get Newsletter

Advertisement