ஒரு கால் வைத்து கொண்டு 320 அடி உயர கட்டடத்தில் ஏறிய சாகச வீரர்!
- 20 Jan 2021
- 39
- 02
ஒரு கால் வைத்து கொண்டு 320 அடி
உயர கட்டடத்தில் ஏறிய சாகச வீரர்!
வாஷிங்டன், ஜன.20-
விபத்தில் கால்களை இழந்த மலை ஏற்ற வீரர் ஒருவர், வீல்சேரில் அமர்ந்து கொண்டு, 320 அடி உயர கட்டிடத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். சமூக வலைதளங்களில் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
ஹாங்காங் நாட்டைச் சேர்ந்த மலையேற்ற வீரர் ஷி வாய் (37 வயது). இவர் நான்கு முறை ஆசிய சாம்பியனாக வெற்றி பெற்றுள்ளார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த, பயங்கர கார் விபத்து ஒன்றில், அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்தார்.
ஆனால் அவரது இடுப்புக்கு கீழ் உள்ள உறுப்புகள் அனைத்தும் செயலிழந்து போனது. அப்போது முதல், வீல் சேரில் தனது வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்.
இருப்பினும் வீட்டிலேயே முடங்கி போக மனம் ஒத்துழைப்பு தரவில்லை.
அடுத்து என்ன செய்யலாம் என யோசித்து, கோவ்லூன் பெனிசுலாவிலுள்ள 320 அடி உயர, நினா டவரில் வீல்சேரின் உதவியுடன் ஏற முடிவு செய்தார்.
இதன்படி, வீல்சேரில் அமர்ந்து கொண்டே, அந்த உயரமான கட்டிடத்தில் ஏறி முடித்தார். இதற்காக அவருக்கு 10 மணி நேரம் தேவைப்பட்டுள்ளது.
அவர் தனது சாதனையின் மூலம், சுமார் 5 கோடி ரூபாய் நிதி திரட்டி இருக்கிறார். இதனை முதுகுத் தண்டுவட பாதிப்பால் வாழ்க்கை இழந்தவர்களுக்கு பயன்படுத்த இவர் திட்டமிட்டுள்ளார்.
தனது இந்த சாதனை குறித்து ஷி வாய் கூறுகையில், கட்டிடத்தில் ஏற முதலில் எனக்கு சிறிது பயம் இருந்தது. மலையில் ஏறும்போது, சிறிய பாறைகளையோ, அங்கிருக்கும் சின்ன சின்ன ஓட்டைகளையோ பிடித்துக் கொள்வேன்.
ஆனால், கண்ணாடியில் ஏறுவது கடினம். சாதித்ததில் எனக்கு மகிழ்ச்சி என்றார்.
Featured News
Tags
- மாவட்டச்செய்திகள்
- வேலூர்
- அரியலூர்
- செங்கல்பட்டு
- சென்னை
- கோவை
- கடலூர்
- தருமபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- கள்ளக்குறிச்சி
- காஞ்சிபுரம்
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- இராமநாதபுரம்
- இராணிப்பேட்டை
- சேலம்
- சிவகங்கை
- தென்காசி
- தஞ்சாவூர்
- தேனி
- தூத்துக்குடி
- திருச்சி
- திருநெல்வேலி
- திருப்பூர்
- திருப்பத்தூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- திருவாரூர்
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சட்டசபை தேர்தல்-2021
- பட்ஜெட்
- கூட்டத்தொடர்
Important Links
Get Newsletter
Subscribe to our newsletter to get latest news, popular news and exclusive updates.
Leave A Comment