அமெரிக்க அரசின் சுகாதாரத் துறை துணை செயலாளராக திருநங்கை நியமனம்
- 21 Jan 2021
- 40
- 02
அமெரிக்க அரசின் சுகாதாரத் துறை
துணை செயலாளராக திருநங்கை நியமனம்
வாஷிங்டன், ஜன.21-
அமெரிக்க அரசின் சுகாதாரத் துறை துணை செயலாளராக திருநங்கை டாக்டரை ஜோ பைடன் நியமித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், தனது தலைமையில் அமையவுள்ள புதிய அரசில் முக்கிய பொறுப்புகளுக்கு பொருத்தமான தலைவர்களையும், அதிகாரிகளையும் நியமனம் செய்து வருகிறார்.
அந்த வகையில், சுகாதாரத்துறை துணை செயாளராக டாக்டர் ரேச்சல் லெவின் என்ற திருநங்கையை ஜோ பைடன் நியமித்துள்ளார். இதன்மூலம் அமெரிக்க அரசுத்துறையின் உயர் பொறுப்பு வகிக்கும் முதல் திருநங்கை என்ற வரலாற்று பெருமையை பெற்றுள்ளார் டாக்டர் லெவின்.
நிலையான தலைமை மற்றும் இன்றியமையாத நிபுணத்துவத்தை லெவின் கொண்டு வருவார் என்றும், இதுபோன்ற பதவிகளுக்கு வருவதற்கு அவர்களின் ஜிப் குறியீடு, இனம், மதம், பாலின அடையாளம், உடற்திறன் குறைபாடு ஆகியவை முக்கியமல்ல என்றும் பைடன் தனது அறிக்கையில் கூறி உள்ளார்.
அமெரிக்க நிர்வாகத்தின் சுகாதார முயற்சிகளை வழிநடத்த உதவும் தகுதி வாய்ந்த தேர்வு லெவின் என்றும் பைடன் கூறி உள்ளார்.
லெவின் தற்போது பென்சில்வேனியா சுகாதார செயலாளராகவும், மாநில மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் மருத்துவம் மற்றும் மனநல பேராசிரியராகவும் உள்ளார்.
Featured News
Tags
- மாவட்டச்செய்திகள்
- வேலூர்
- அரியலூர்
- செங்கல்பட்டு
- சென்னை
- கோவை
- கடலூர்
- தருமபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- கள்ளக்குறிச்சி
- காஞ்சிபுரம்
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- இராமநாதபுரம்
- இராணிப்பேட்டை
- சேலம்
- சிவகங்கை
- தென்காசி
- தஞ்சாவூர்
- தேனி
- தூத்துக்குடி
- திருச்சி
- திருநெல்வேலி
- திருப்பூர்
- திருப்பத்தூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- திருவாரூர்
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சட்டசபை தேர்தல்-2021
- பட்ஜெட்
- கூட்டத்தொடர்
Important Links
Get Newsletter
Subscribe to our newsletter to get latest news, popular news and exclusive updates.
Leave A Comment